25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் உடன் சந்திப்பு: "சீன-அமெரிக்க உறவு ரத்தத்தால் நிலைத்து நிற்கும்"- ஜின்பிங்

Date:

நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) அமெரிக்காவிற்குச் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

இவரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திற்கே சென்று அமெரிக்க அதிபர் வரவேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜின்பிங் பயணம் ஏன் முக்கியமானது?

ஜின்பிங்கின் இந்தப் பயணம் மிக மிக முக்கிய நேரத்தில் நடந்திருக்கிறது. ஈரானும், சீனாவும் நெருங்கிய கூட்டாளிகள். ஈரான் மீது அமெரிக்கா போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தப் பயணம் ஏற்பட்டுள்ளது.

ட்ரம்ப் – ஜி ஜின்பிங்

அடுத்ததாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் முதல் நாடு சீனா. கடந்த வாரம்தான், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் டாப் 5 நாடுகளுக்கு 100 சதவிகித வரி விதிக்கும் ‘ரஷ்ய தடைச் சட்டத்தில்’ கையெழுத்திட்டார் ட்ரம்ப்.

இது இன்னும் அமலுக்கு வரவில்லை. ஜின்பிங்கின் பயணத்திற்காக அமல் தள்ளிச் சென்றுள்ளது. இதுவும் மிக முக்கியமான ஒன்று.

இரு நாடுகளுமே ஏ.ஐ-யில் முன்னணியில் இருந்து வருகிறது. இப்போது ஏ.ஐ தொழில்நுட்ப ரேஸில் யார் முந்துவார் என்கிற போட்டியும் நிலவி வருகிறது. இந்த நேரத்தில் இந்தப் பயணம் என்பது கவனிக்கப்படுகிறது.

மிக முக்கியமாக, இரு நாடுகளுக்கு இடையேயும் அமைதியாக வணிகப் போர் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

தொழில்நுட்பத் தடைகள், விவசாய ஏற்றுமதிகள் மற்றும் அரிய கனிமங்களின் சப்ளை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையே விரிசல் இருந்து வருகிறது.

இது இப்போதைக்கு ஒப்பந்தங்கள் மூலம் இரண்டு மாதங்களுக்குத் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில்தான் இந்தப் பயணம் நடந்திருக்கிறது.

ட்ரம்ப் பேச்சு

நேற்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தது.

இந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்ப், “அதிபர் ஜி, மேடம் பெங் மற்றும் சீனக் குழுவை எங்களது அழகான வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி. இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

கடந்த மே மாதம் பெய்ஜிங்கில் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு எங்களுக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான, மிக நேர்த்தியான உபசரிப்பு மறக்க முடியாதது.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் – ஜி ஜின்பிங்

அமெரிக்காவிற்கு இரண்டாவது முறையாக அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல் சீனத் தலைவர் என்ற பெருமையைப் பெறும் அதிபர் ஜியை வாஷிங்டனில் உபசரிப்பதில் மெலனியாவும் நானும் பெருமிதம் கொள்கிறோம்.

2016-ல் நான் முதன்முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதிபர் ஜியும் நானும் பரஸ்பர மரியாதை மற்றும் எங்களது மக்களின் முக்கிய நலன்களின் அடிப்படையில் ஒரு உண்மையான, மிகச் சிறந்த நட்புறவை வளர்த்தெடுத்துள்ளோம்.

வெள்ளை மாளிகையில் நாம் இருவரும் ஒன்றாகச் சந்திப்பது இதுவே முதல்முறை” என்று பேசியிருந்தார்.

ஜின்பிங் பேச்சு

ஜி ஜின்பிங் பேசும்போது, “இன்று அதிபர் ட்ரம்பும் நானும் பல முக்கிய விவகாரங்களில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளோம்.

இது ஆக்கபூர்வமான சீனா-அமெரிக்க உறவுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளதோடு, இருநாட்டு உறவுகளுக்கும் புதிய வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது.

80 ஆண்டுகளுக்கு முன்பாக, ஜப்பானிய ராணுவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போரில் சீன மற்றும் அமெரிக்க மக்கள் தோளோடு தோள் நின்று போராடினார்கள்.

ரத்தத்தாலும் தியாகத்தாலும் செதுக்கப்பட்ட இத்தகைய ஆழமான நட்புறவு, தலைமுறை கடந்து நிச்சயம் நிலைத்து நிற்கும்.

அதிபர் ட்ரம்ப் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ என்று அமெரிக்க மக்களைப் பிரமாண்டமான வளர்ச்சியை நோக்கி வழிநடத்த போவதாக உறுதியேற்றுள்ளார்.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் – ஜி ஜின்பிங்

சீனாவோ தேசிய மறுமலர்ச்சியை அடைவதில் தீவிரமாகி, நவீனமயமாக்கல் மூலம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

இந்த இரண்டும் மிகவும் முக்கியமானவை. அதே வேளையில் அவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று வலுசேர்க்கக்கூடியவை.

சீனாவும் அமெரிக்காவும் பொறுப்புமிக்க வல்லரசுகளாகச் செயல்பட வேண்டும். எங்களது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இயங்கி,

பெருநாடுகள் இணைந்து வாழ்வதற்கான ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டறிய வேண்டும்” என்று பேசியிருந்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"வாக்குரிமையை பறிக்கும் சதியில் அமித் ஷாவுடன் ஞானேஷ் குமார் ஈடுபட்டிருக்கிறார்"- மாணிக்கம் தாகூர்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான...

இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம்… விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு அலட்சியமா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்!மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால், டெல்டா பாசனத்துக்கு...

சாலை முதல் சாக்கடை வரை… முதல்வர் வருகைக்காக மாறும் மதுரை ராஜாஜி மருத்துவமனை சுற்றுப்புறம் | Photos

தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" -...

டேட்டா திணிப்பு… டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, இந்தியாவில் 128 கோடி...