15
September, 2026

A News 365Times Venture

15
Tuesday
September, 2026

A News 365Times Venture

`விஜய்யைவிட நன்றாக நடனமாடுகிறேன்'- வி.டி.சதீசன் EB ஊழியர்களுடன் நடனமாடும் AI வீடியோ; நீக்கிய மெட்டா!

Date:

​கேரள மாநிலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துவருகின்றனர். இந்த நிலையில் கேரள மின்வாரிய ஊழியர்களுடன் கேரள முதல்வர் வி.டி.சதீசன் உற்சாகமாக நடனமாடுவது போன்ற ஏ.ஐ வீடியோ அண்மையில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ‘ஏ.ஐ காவலா’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ மூன்று நாள்களில் பல்வேறு சமூக வலைதளங்கள் வழியாக 7 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து வைரலானது. திருச்சூரைச் சேர்ந்த அபிஜித் என்பவர் அந்த வீடியோவை கிரியேட் செய்து பகிர்ந்திருந்தார். அதை, `ஏ.ஐ வீடியோ’ என்ற குறிப்புடன்தான் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவைப் பார்த்த முதல்வர் வி.டி.சதீசன், “நன்றாக நடனமாடக்கூடிய மோகன்லாலை விடவும், எனது நண்பரும் நடிகருமான விஜய்யை விடவும் நான் மிகச் சிறப்பாக நடனமாடுவதுபோல இந்த வீடியோவில் காட்டியுள்ளனர். இதைப் பார்த்துவிட்டு நானே ஆச்சர்யப்பட்டுப் போய்விட்டேன்” எனக் கூறியிருந்தார்.

கேரள முதல்வர் வி.டி.சதீசன்

இதற்கிடையே ​காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போலீஸில் புகார் அளித்தனர். ​ஒரு தனிநபரின் முன் அனுமதியின்றி, அவரது உருவத்தை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தவறாகப் பயன்படுத்தி வீடியோ உருவாக்குவது சைபர் சட்டப்படி குற்றம் எனக் காவல்துறையின் சைபர் பிரிவு சுட்டிக்காட்டியது. ​இதற்கிடையே மெட்டா நிறுவனம் திடீரென அந்த வீடியோவை இந்திய பயனர்கள் யாரும் பார்க்க முடியாதவாறு முடக்கியது.

வி.டி.சதீசன் நடனமாடும் ஏஐ வீடியோ

இது குறித்து வீடியோவை வெளியிட்ட அபிஜித் கூறுகையில், “இந்த ​வீடியோவைப் பார்த்துவிட்டு முதல்வர் என்னை அழைத்துப் பாராட்டுவார் என்றே நான் நம்பியிருந்தேன்” எனக் கூறியதுடன், ​வீடியோ கட்டுப்படுத்தப்பட்ட தகவலை `ஏ.ஐ காவலா’ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஸ்டோரி வாயிலாக வெளிப்படுத்தினார். இதற்கிடையே கேரள போலீஸார் மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்தே அந்த வீடியோ முடக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய்சேதுபதி : `வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்'- சீமான் ஆதரவு குரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த கருத்தை முன்வைத்து தவெக...

`தரையில படுக்க வைக்கிறாங்க; கேவலமா ட்ரீட் பண்றாங்க’ – திருவண்ணாமலை ஜி.ஹெச் மீது கர்ப்பிணி புகார்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை...

`வெளியிலிருந்துதான் ஆதரவு' – இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம்...

'கழுத்தை நெரிக்கும் இணைய கூலிப்படைகள்; கட்சிப் பேதம் எல்லாம் இல்லை.!' – கடிவாளம் போடுமா தலைமைகள்?

சமீபத்தில் நடந்திருக்கும் ஒரு நிகழ்வு கருத்து சுதந்திரத்தின் மீதான பாதுகாப்பைப் பற்றி...