31
January, 2026

A News 365Times Venture

31
Saturday
January, 2026

A News 365Times Venture

`விஜயகாந்தின் கொள்கைப்படி முடிவு இருக்கும் என நம்புகிறேன்..!'- தேமுதிக குறித்து ராஜேந்திர பாலாஜி

Date:

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் “விடியா ஆட்சி உங்கள் வீட்டு பில்-லே சாட்சி” என்ற தலைப்பில், விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடக்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முன்னாள் முதல்வர் எடப்பாடி சந்திக்கச் சென்றாரா என செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையும், கரூர் துயர சம்பவத்தையும் சம்பந்தப்படுத்தி பேசுவது  நகைப்பிற்குரியதாக உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது போராட்டத்தில் ஏற்பட்டது. கரூர் சம்பவம் அப்படியல்ல.  கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் விஜய்யைப் பார்க்க வந்து உயிரிழந்தவர்கள். தி.மு.க-விற்கும் த.வெ.க-விற்கும் போட்டி என செங்கோட்டையன் கூறுவது, பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டது என நினைப்பதுபோல் உள்ளது. யார் யாருக்குப் போட்டி என்பதும், ஒவ்வொரு கட்சிகளின் வண்டவாளம் தண்டவாளங்களெல்லாம் தேர்தலுக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

டி.டி.வி தினகரன், அ.தி.மு.க கூட்டணிக்கு வருகை தந்துள்ளதால் ஜெயலலிதா காலத்தில் இருந்த அ.தி.மு.க.வின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அ.தி.மு.க கூட்டணிக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. தி.மு.கவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கையாக இருந்தது. அதை முன் வைத்து தே.மு.தி.க தலைமை முடிவெடுக்கும் என நம்புகிறேன்.

ராஜேந்திர பாலாஜி

எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக்காக யார் வீட்டு வாசலையும் தட்டப் போவதில்லை. எங்கள் கூட்டணியை மேலும் மேலும் பலப்படுத்தவே கூட்டணிக் கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.  அதற்காக அ.தி.மு.க-வினர் பலவீனமானவர்கள் அல்ல. யாரிடமும் மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு அ.தி.மு.க பலவீனமாக இல்லை. இதை எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி, பலவீனமானவர் அல்ல பலம் பொருந்திய தலைவர்.

தி.மு.க கட்சியை பொறுத்தவரை ஆட்சியில் பங்கு கொடுக்காது, அ.தி.மு.கவும் அதேபோல ஆட்சியில் பங்கு கொடுக்காது. சின்ன சின்ன கட்சிகளையெல்லாம் கூட்டு சேர்ப்பதால் தாங்கள் பெரிய பலமான கட்சி என கூட்டணி கட்சிகள் நினைத்துக்கொள்வது தவறான பிற்போக்கு. கூட்டணியில் சேரக்கூடிய கட்சிகள் எல்லாம் ஆட்சியில் பங்கு எனவும், எங்களால்தான் வெற்றி பெற்றார்கள் என சொல்வதெல்லாம் கேலிக்குரியது, விளையாட்டுக்குரியது.

பிரேமலதா

2026 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்குமான  தேர்தல்தான். யானை மீது அமர்ந்து செல்வபவர்கள் தாங்கள்தான் ராஜா என சொல்லிக்கொள்வார்கள், அதே யானை தும்பிக்கையால் அடித்து தள்ளினால் செல்லுமிடம் தெரியாமல் சென்று விடுவார்கள்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு – தவெக சொல்வதென்ன?

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக்...

`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' – பி.டி.செல்வகுமார்

தூத்துக்குடியில் த.வெ.க தலைவர்  விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச்...