29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

"ராணுவத் தாக்குதலுக்கான பெயரைப் பாகிஸ்தான் இதிலிருந்துதான் எடுத்திருக்கிறது" – ஓவைசி சொல்வது என்ன?

Date:

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீத இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனப் பெயர் வைத்தது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலை நடத்தியது.

அந்தத் தாக்குதலுக்கு ‘Bunyan Un Marsoos’ எனப் பெயர் வைத்தது. இந்த வார்த்தை எப்படி வந்தது என்பது குறித்து AIMIM கட்சியின் தலைவரும், தெலங்கானா எம்.பி-யுமான அசாதுதின் ஓவைசி பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், “பாகிஸ்தான் அவர்களின் புதிய தாக்குதலுக்கு ‘புன்யான்-அல்-மர்சூஸ்’ என்று பெயரிட்டுள்ளது.

இது குர்ஆனில் உள்ள ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது. அதில் அல்லாஹ், ‘நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால், ஒரு உறுதியான சுவரைப் போல நில்லுங்கள்’ என்று கூறுகிறார்.

ஆனால் பாகிஸ்தான் இராணுவமும், அரசும் தீவிரப் பொய்யர்கள். முந்தைய அதே வசனத்தில், ‘நீங்கள் செய்யாத விஷயங்களை ஏன் சொல்கிறீர்கள்’ என்று அல்லாஹ் கேட்கிறார்.

உண்மையில் அவர்கள் குர்ஆனின் முழு நோக்கத்தையும் புரிந்து கொள்ள விரும்பாத அளவுக்குப் பொய்யர்கள்.

கிழக்கு பாகிஸ்தானில் உள்ள வங்காள முஸ்லிம்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது மட்டும் ஒரு சுவரைப் போல நிற்க மறந்துவிட்டார்களா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக: '23 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' – விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று...

திமுக : ஆளுமை செலுத்திய மண்டல பொறுப்பாளர்கள்; உதயநிதியின் ஆதிக்கம் – 'அப்ருவல்' கொடுத்த முதல்வர்!

மூன்று அமைச்சர்கள் உட்பட பல சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை கழற்றிவிட்டு, தி.மு.க வின்...

தவெக: திருச்சி கிழக்கை டிக் அடித்த விஜய்; காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டடு நடிகராக இருந்த விஜய், த.வெ.க என்ற...

அவிநாசி: 26 வயதில் திமுக வேட்பாளராகக் களமிறங்கும் இளம் மருத்துவர்; யார் இந்த கோகிலா மணி?

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தரப்பில் வேட்பாளராகக் களமிறங்கும்...