14
October, 2026

A News 365Times Venture

14
Wednesday
October, 2026

A News 365Times Venture

"மோடியும், ஷாவும் பயப்படும் காலம் இது" – ராகுல் காந்தி தேநீர் விருந்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள்!

Date:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்… சிறப்பு தீவிர திருத்தத்தில் (SIR) முறைகேடு நடந்துள்ளது என்று இந்தியா கூட்டணி தொடர்ந்து போராட்டத்தையும், எதிர்ப்புக் குரலையும் முன்னெடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேநீர் விருந்தும், செய்தியாளர்கள் சந்திப்பையும் ஏற்பாடு செய்திருந்தார்.

தேநீர் விருந்து முடிந்தவுடன், செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேசியதாவது…

ராகுல் காந்தி – தேநீர் விருந்து

ED, CBI-ஐத் தாண்டி, 10 அடி மேலே…

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேஜஸ்வி யாதவ்:

“ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம். இதற்காக என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும், அதை அனைவரும் இணைந்து செய்வோம்.

நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களான அமலாக்கத்துறை, சிபிஐ அல்லது வருமான வரித்துறை ஆகியவற்றைத் தொடர்ந்து கைப்பற்ற முயலும் நபர்களைக் கடந்து, தேர்தல் ஆணையமும் ஞானேஷும் இன்னும் 10 அடிகள் மேலே சென்றுவிட்டனர்”.

ஜந்தர் மந்தரும் தடை என்றால், எங்கேதான் போவது?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அகில இந்திய பொதுச்செயலாளர் டி. ராஜா:

“டெல்லி நாட்டின் தலைநகரம், டெல்லி நமது நகரம். ஆனால் எங்கு பார்த்தாலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவதில்லை.

போராட்டங்கள் காரணமாகவே இப்படிச் செய்வதாகக் கூறுகிறார்கள். ஆம், போராட்டங்கள் நடக்கத்தான் செய்யும், போராட்டங்களை உங்களால் ஒடுக்கவோ நசுக்கவோ முடியாது. இப்போது அரசாங்கம் ஜந்தர் மந்தரை போராட்டக் களத்திலிருந்து நீக்கியுள்ளது.

ராகுல் காந்தி - தேநீர் விருந்து
ராகுல் காந்தி – தேநீர் விருந்து

இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். ஜந்தர் மந்தர் மக்களின் போராட்ட இடமாகத் தொடர வேண்டும். ஏனெனில் இதற்கு முன் ராஜ்பாத்தில் போராட்டம் நடத்தினோம். அது தடை செய்யப்பட்டது.

நாடாளுமன்ற வீதியில் போராட்டம் நடத்தினோம். அதுவும் தடை செய்யப்பட்டது. இப்போது ஜந்தர் மந்தர். அப்படியானால் தேசியத் தலைநகரின் மக்கள் எங்கேதான் போவது?

எனவே ஜந்தர் மந்தரை போராட்ட இடத்திலிருந்து நீக்கியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மக்களின் போராட்ட இடமாக ஜந்தர் மந்தரை மீண்டும் மீட்க நாங்கள் போராடுவோம்.”

மேற்கு வங்கத்தில் தற்போது நடப்பது சட்டவிரோத அரசு…

திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகரிகா கோஷ்:

“எஸ்.ஐ.ஆர் என்பது பெயர்களை நீக்குவதற்கும் தேர்தல்களை முறைகேடு செய்வதற்கும் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது.

இப்போது உள்ள மேற்கு வங்க அரசு ஒரு சட்டவிரோதமான அரசு. வாக்குத் திருட்டு மூலமே அது ஆட்சியில் உள்ளது.டெல்லியில் போராட்டங்கள் எவ்வாறு ஒடுக்கப்பட்டன… மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன என்பதைப் பார்க்கிறீர்கள்.

தேர்தல் ஆணையம் நியாயமாக இல்லை. எஸ்.ஐ.ஆரை நிறுத்துங்கள். பழைய பட்டியலுக்குத் திரும்புங்கள். ஞானேஷ் குமார் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.”

ராகுல் காந்தி - தேநீர் விருந்து
ராகுல் காந்தி – தேநீர் விருந்து

ஞானேஷ் குமார் ஒரு மாஃபியா

சிவசேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத்:

“ஞானேஷ் குமார் ஒரு மாஃபியா.10-12 ஆண்டுகளாக மோடியும் ஷாவும் இந்த நாட்டை அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் வைத்திருந்தனர். இப்போது அவர்கள் பயப்பட வேண்டிய முறை.

இப்போது 4,00,000 ஆயுதப் படைகளை இங்கே நிறுத்திவிட்டு உள்ளே பயந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.”

ராகுல் காந்தி:

“இங்கே தனித்தனிப் போராட்டங்கள் எதுவுமில்லை. ஒரே ஒரு போராட்டம் மட்டுமே உள்ளது. அந்தப் போராட்டத்திற்கு ஒரே ஒரு நோக்கம் உள்ளது. அது இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது.

இந்த நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் முறை சீரழிக்கப்பட்டுவிட்டது. அரசியலமைப்புச் சட்டம் கிழிக்கப்பட்டு எறியப்பட்டுள்ளது.

நீங்கள் இந்திய அரசியலமைப்பை அழித்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்பது அவ்வளவு எளிதானதல்ல. நேற்று (அக்டோபர் 12) நீங்கள் பார்த்தது இங்கு நிற்கும் அரசியல் கட்சிகளின் வெளிப்பாடு மட்டுமல்ல. இந்திய மக்களின் வெளிப்பாடு.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மின்சாரம்: 'வரலாற்றிலேயே இல்லாத அதிக விலை' – தவெக அரசின் முடிவு சரியா? தவறா?| அலசல்

தமிழ்நாடு மின்வாரியம் கடந்த 1957-ம் ஆண்டு ஒரு சேவை நிறுவனமாக அரசால்...

“எல்.முருகனை நீக்கிய மோடி; மத்திய அமைச்சரவையில் தமிழர் யாரும் இல்லை” – பிரவீண் சக்கரவர்த்தி சாடல்

நேற்று மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.தன்னுடைய தொகுதிக்குத்...

சிறையில் சிஜேபி தலைவர்கள்: “துணிவிருந்தால் எமெர்ஜென்ஸியை அமல்படுத்துங்கள் மோடி" – அபிஜித் ஆவேசம்

டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையினரின் பணியைத்...

'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' – கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!

நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி...