4
May, 2026

A News 365Times Venture

4
Monday
May, 2026

A News 365Times Venture

முருகன் சென்டிமென்ட் டு வன்னியர் வாக்குகள் – திருப்போரூரில் தவறிய பாமக கணக்கு… தோல்வியடைந்த பாலு!

Date:

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தோல்வியை தழுவியுள்ளார் பாமக-வின் வழக்கறிஞர் பாலு.

இந்தத் தொகுதியில் தற்போது வெற்றி பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விஜயராஜ்.

இந்தத் தொகுதியில் பாலுவிற்கு டஃப் போட்டியாக கருதப்பட்ட வி.சி.கவின் பன்னீர்தாஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

திருப்போரூர் முருகன் கோயிலுக்கும், அன்புமணிக்கும் தனி சென்டிமென்ட் உண்டு. அதையொட்டியே தனது வழக்கறிஞரை அந்தத் தொகுதியில் களமிறக்கினார் பாமக தலைவர் அன்புமணி.

எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உடன் கே.பாலு

சென்டிமென்டையும் தாண்டி, திருப்போரூரில் கணிசமான வன்னியர் வாக்குகளும் உண்டு. அதை நம்பியும் அங்கே களமிறங்கினார் பாலு.

ஆனால், தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு இனி சமூக வாக்குகள் மட்டும் போதாது என்பதை பாலுவின் சறுக்கல் உறுதி செய்துள்ளது.

இந்தத் தொகுதியில் வெற்றி பெற பன்னீர்தாஸ் தீவிரமாகக் களமாடியும் இந்தத் தொகுதியை தவெக-வே தட்டிச் சென்றுள்ளது.

கே.பாலு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 67,392 வாக்குகள் ஆகும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'சந்திரபாபு நாயுடுவை இறக்கிய என்.டி.ஏ' – ஒரே ரவுண்டில் ஆனந்துக்கு தி.நகரை வென்று கொடுத்த விஜய்!

தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியில் கிட்டத்தட்ட 13,000...

32 திமுக அமைச்சர்களில் 15 பேர் அவுட்; சபாநாயகரும் தோல்வி! – Minister Candidates Result Details!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தற்போதுவரை தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை பெற்று வருகிறது....

அன்று எம்.ஜி.ஆர், இன்று விஜய்; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதுமே ஒரு வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும்....

TVK: எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய் – `வாத்தியாரை’ மிஞ்சிய `மாணவ’னின் அரசியல் பயணம்!

தமிழக அரசியலுக்கும் திரைப்படத் துறைக்கும் இடையிலான தொடர்பு என்பது இந்திய அளவிலேயே...