2
May, 2026

A News 365Times Venture

2
Saturday
May, 2026

A News 365Times Venture

முதல்வர் ஸ்டாலினின் நீலகிரி பயணம்: துர்கை வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின்

Date:

முதலமைச்சர் ஸ்டாலின் அவரின் மனைவியுடன் 5 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஊட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கும் முதலமைச்சர் அரசு மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்‌.

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நேற்று மனைவியுடன் சென்றிருந்த முதலமைச்சர், வளர்ப்பு யானைகளுக்குக் கரும்பு வழங்கி பாகர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

பாகர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்த நிலையில், இன்று காலை ஊட்டியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மனைவி துர்கா ஸ்டாலின் குன்னூர் அருகில் உள்ள எடப்பள்ளி சாய்பாபா கோயிலுக்குச் சென்றிருந்தார்.

துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

கோயிலில் அமைந்துள்ள துர்கை அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், திரைப்பட நடிகை சரண்யாவுடன் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

துர்கா ஸ்டாலின் கோயில் வருகையை முன்னிட்டு சாய்பாபா கோயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் கோயிலுக்கு வந்திருந்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' – கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது....

'தவெக-விடம் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வலிமை இல்லை' – திருமாவளவன் பேச்சு

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி தான் வெற்றி...

"சில தொகுதிகளில் விசிக தோழர்களிடம் ஒற்றுமை குறைவு" – திருமாவளவன் வருத்தம்

நாளை மறுநாள் (மே 4), தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும்...