31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

`மு.க.அழகிரி மகன் தயாநிதிக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை' – நீதிமன்ற உத்தரவின் பின்னணி என்ன?

Date:

மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சுமார் 256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்ட (PMLA) வழக்கில் 3-வது குற்றவாளியாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன்  தயாநிதி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் காரணமாகத் தான் விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக தயாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், 3-வது குற்றவாளிக்கான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு  விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், தயாநிதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

மேலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் வாக்களித்து, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

மு.க.அழகிரி

இதிலிருந்து அவர் நலமுடன் இருப்பது தெரியவருவதால், புதுச்சேரி ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவக் குழு மூலம் அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

தயாநிதி தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது,” நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மனநலக் குறைபாடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது, சமூக வலைதளப் படங்களை வைத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  S. சண்முகவேல் பிறப்பித்த உத்தரவில், ‘கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும்?’ எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும் தயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல மருத்துவர் (Chief Psychiatrist), கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் (Chief Neurologist) அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து தயாநிதிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிபிஐ – நீதிமன்றம்

தேவைப்பட்டால் தயாநிதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் ஜிப்மர் இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

மேலும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறையின் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு தயாநிதி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் ரொக்கப் பணம் பற்றி தெரிவிக்க வேண்டும்! கலெக்டர் உத்தரவின் காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அலுவலர்கள் மற்றும்...

`தீபாவளி, பொங்கல் நாள்களில் ஒருநாளாவது லீவ் கொடுங்க' – டாஸ்மாக் ஊழியர்களுக்காக பேசிய சௌமியா அன்புமணி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மகளிர், மதுவிலக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வேளாண்மைத் துறை மானியக்...

காமராஜர் விருப்பம் டு எம்.ஜி.ஆர் முயற்சி: காகிதத்தில் தூங்கும் ராசிமணல் அணைத் திட்டம்! | ஓர் அலசல்

இந்த உலகம் 71% நீராலும் 29% நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. ஆனால் உலகம்...

El Nino சவால்: வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில்...