19
September, 2026

A News 365Times Venture

19
Saturday
September, 2026

A News 365Times Venture

மீனாட்சி அம்மன் கோயில்: 'புனித நீர்தெளிப்பு, நீதிபதி அவமதிப்பு?' – அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்

Date:

‘புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதா? நீதிபதி அலட்சியப்படுத்தப்பட்டாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி காத்திருந்தபோது, அவரைப் பற்றி அமைச்சர் ஒருவர் அலட்சியமாகக் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மையெனில், அது நீதித்துறையின் கண்ணியத்தையும் அரசமைப்புச் சட்டத்தை உறுதி செய்யும் நீதித்துறையின் மரியாதையையும் பாதிக்கும் வகையிலானது.

எனவே, தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் இதுகுறித்து உடனடியாகத் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்பட்டதா, தமிழில் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டனவா, நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டனவா என்பதையும் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற சத்தியபாமா அம்மையார், ‘மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் ஆகியோர் வேள்விச்சாலையில், குடமுழுக்கில் தமிழுக்கு உரிய இடம் ஒதுக்கவில்லை, இதைக் கேட்டதற்கு காவல்துறை அவமதித்ததாக’ வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.

ரங்கநாதன்

தந்தை பெரியார் வழியில் நடப்பதாக சொல்லும் இந்த அரசு, குறிப்பாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷும், அமைச்சர் நிர்மல்குமாரும், குடமுழுக்கு தமிழிலும் நடைபெறும் என்று சொல்லி ஏமாற்றியது ஏன் என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

விழாவில் வி.வி.ஐ.பி, வி.ஐ.பி அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்ட விதம், அவற்றுக்காக வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் தொகை, பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் தொடர்பாகவும் குறிப்பிட்ட நபர்களுக்கும், குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பாக தவெக அரசு, கோயில் வழிபாட்டில் பாகுபாடு இருக்காது என்று சொல்லிவிட்டு, இன்று அதற்கு நேர் எதிராக அமைச்சர்களும், அவர்களது உறவினர்களும் அதிகாரிகளும், குடமுழுக்கு நிகழ்வை ஆக்கிரமித்துக் கொண்டு, மக்களை அனுமதிக்காமல் அலைக்கழித்து, குடமுழுக்கு புனித கலச நீர், மக்கள் மீது செழிக்கப்படாமல் அவமரியாதை செய்திருப்பது, குடமுழுக்கு நோக்கத்தையே சீர்குலைத்து விட்டது. கோயில் நிர்வாகத்தின் நோக்கம் பக்தர்களின் நலனையும் கோயில் பாதுகாப்பையும், இறைவன் அருளைப் பெரும் நம்பிக்கையையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு
மீனாட்சி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு

ஆனால், குடமுழுக்கில் பயன்படுத்தப்பட்ட புனித நீர் என வெறும் தண்ணீரை வாளியில் ஊற்றி, காவல்துறையினர் பக்தர்கள் மீது தெளித்தது திட்டமிட்ட ஏமாற்றும் செயல் என மக்கள் நேரடியாக தெரிவித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அவை உண்மையா என்பதை அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

புனித நீருக்கு பதிலாக, வேறு நீர் தெளிக்கப்பட்டது உண்மையானால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் ராஜினாமா செய்ய வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்களின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடனும், சட்ட விதிகளின்படியும், அறங்காவலர் குழுவின் உரிய ஆலோசனையுடனும் நடைபெற வேண்டும். அறங்காவலர் குழுவை புறக்கணித்து முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் விசாரிக்கப்பட வேண்டும்.

கோயில் நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு அரசியல் விளக்கங்களை விட ஆவணங்களுடன் கூடிய வெளிப்படையான பதில்களே தேவை. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷுக்கு எதிராக பாஜக இந்து முன்னணி உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகள் வாயை திறக்காமல் உள்ளன.

தலைமை நீதிபதி தொடர்பாக வெளியாகியுள்ள சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்தும் குடமுழுக்கு விழா ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து புகார்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும், சட்டத்தின் ஆட்சியும், ஆலயங்களில் சமத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ட்ரம்ப் கையெழுத்து 'Done'; ரஷ்ய எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 100% வரி விதிக்கும் ரூட் Clear?

‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்கள் எல்லாம் ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதி அளிக்கின்றனர்’ என்று...

’அறிவிக்கப்படாத மின்வெட்டால் பெரும் இடி விழுந்தது போல உள்ளது’ – கோவை தொழில் துறையினர் வேதனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின் தடை...

"சௌமியாவுக்கு Fans Club தொடங்க இருக்கோம்னு சொன்னாங்க..!"- பாமக தலைவர் அன்புமணி சொன்ன தகவல்!

பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய...

"காங்கிரஸுக்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறது த.வெ.க!" – சொல்கிறார் ரவிக்குமார் எம்.பி

"த.வெ.க தலைவர் விஜய், கரூர் கூட்டத்துக்கு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததால்தான்...