25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

'மாணவர்களாக மட்டும் இருங்கள்; மீறினால்…' – வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் அரசு கட்டளை!

Date:

நாளுக்கு நாள் வெளிநாட்டு மாணவர்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசாங்கம் காட்டும் அதிரடிகள் அதிகரித்து கொண்டே போகின்றன.

கடந்த பிப்ரவரி மாதம், “அமெரிக்க அரசிற்கு எதிராகவும், அதன் கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தும் வெளிநாட்டு மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது தங்களது நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள்” என்று கூறியது அமெரிக்க அரசு.

அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டம் உள்ளிட்ட அரசுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்து நடந்ததால், அந்தப் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் அரசு நிதி நிறுத்தப்பட்டது. இனி அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேரும் அந்தஸ்தும் பறிக்கப்பட்டுள்ளது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்

இந்த ஆண்டோடு படிப்பு முடிபவர்களைத் தவிர, ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் பிற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள வேறு கல்வி நிறுவனங்களில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன?

இந்த நிலையில், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்…

“கல்வி நிறுவனங்களிடம் முன்னரே தெரிவிக்காமல், படிப்பைப் பாதியில் நிறுத்துவது, வகுப்புகளுக்கு செல்லாமல் இருப்பது, பாடப்பிரிவில் இருந்து மாறுவது என இனி இருக்கக்கூடாது. மீறினால், அவர்களுக்கான மாணவர் விசா ரத்து செய்யப்படும்.

எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்கா விசாவைப் பெறுவதற்கான தகுதியை இழப்பார்கள். அதனால், விசாவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை எப்போதும் பின்பற்றுங்கள் மற்றும் மாணவராக இருப்பதைத் தவிர, வேறு எந்தப் பிரச்னைகளிலும் ஈடுபடாதீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இது இந்திய மாணவர்களுக்கு மட்டும் கூறப்படவில்லை. அமெரிக்காவில் படிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் கூறப்பட்டுள்ளது.

Loading…


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எ.வ.வேலு: `இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக' – DVAC ரெய்டு குறித்து ஸ்டாலின்

கடந்த தி.மு.க ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. அவர் அமைச்சராக...

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! | Live Updates

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை. கடந்த...

மதுபாட்டில், மோசமான உணவு: புகார்களை அடுக்கிய மாணவர்கள் – தன் போன் நம்பரை கொடுத்துச் சென்ற அமைச்சர்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு...

"காவல்துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால்.!" – உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

"காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம்...