சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை. வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற...