23
February, 2026

A News 365Times Venture

23
Monday
February, 2026

A News 365Times Venture

மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்…” – திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

Date:

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது.

ஸ்டாலின்

இன்று (பிப்.23) தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.

முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது, “இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம்.

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும்.

மதிமுக அர்ஜுனராஜ்
மதிமுக அர்ஜுனராஜ்

ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்!" – அறநிலையத்துறை

திருக்கோயில்களில் திருக்குடமுழுக்கு விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 மே...

முழு வரி ரத்திற்கு 'சான்ஸே இல்லை': அடுத்த வரி வழிகளை தேடும் ட்ரம்ப் அரசு; இருக்கும் ஆப்ஷன்கள் என்ன?

என்னதான் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று விதிக்கப்பட்ட வரியை உச்ச நீதிமன்றம் ரத்து...

`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' – தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!

வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க...

விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! – மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி

காய் நகர்த்திய பொன்முடி... கைவிரித்த அறிவாலயம்!விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக...