8
November, 2026

A News 365Times Venture

8
Sunday
November, 2026

A News 365Times Venture

பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதி

Date:

‘முரசு’ புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆளும் தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புயல் வரும் சமயத்தில் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது.

உதயநிதி

அதே நேரத்தில், கூண்டில் ஆபத்தை உணர்த்தும் கொடியை ஏற்றியிருக்க வேண்டும். ஆனால், இது போன்ற எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொள்ளவில்லை.

கடந்த திமுக ஆட்சியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. ஆனால், இந்த தவெக அரசு மீனவர்கள் மீது எந்தவித அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அரசு அறிவித்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை போதாது, மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

கோவை பெரியார் அறிவுலகம்
கோவை பெரியார் அறிவுலகம்

தொடர்ந்து பெரியார் நூலக முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த உதயநிதி , ” பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணைக்கு நாங்கள் தயார். திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை என்பதில் 100% உறுதியாக இருக்கிறேன். புத்தக ஆசிரியர்களின் பெயர்களை வைத்தே எந்த ஆட்சியில் ஊழல் நடந்தது எனத் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" – ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி – வருந்தும் சொந்த கிராம மக்கள்இப்படியொரு...

`கோவை நூலக புத்தகங்களில் ஊழல்; முதல்வர், அமைச்சர்களுக்கும் பங்கா?' – நயினார் நாகேந்திரன் கேள்வி

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை...

ஈரான் – அமெரிக்கா: `அதிகரிக்கும் பதற்றம்: தொடர்ந்து கேட்கும் வெடிகுண்டுச் சத்தம்' – என்ன நடக்கிறது?

ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. பாரசீக வளைகுடா...

190 குழந்தைகளின் மரணம்… மதவழிபாட்டின் பெயரில் கொடூரம்: தலைவருக்கு 200 ஆண்டுகள் சிறை!

கடவுளைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகப் பசியுடன் இருந்தால் சொர்க்கத்துக்குச் செல்லலாம் என்று...