25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

புதுச்சேரி: “எனக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது!” – சட்டப்பேரவையில் உள்துறை அமைச்சர் பகீர்

Date:

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அரியாங்குப்பம் தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ அய்யப்பன் எம்.எல்.ஏ பேசிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய இருக்கையில் இருந்தபடி முதலமைச்சர் ரங்கசாமியுடன் பேசிக் கொண்டிருந்தார், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.

அதைப்பார்த்த தற்காலிக சபாநாயகர் அன்பழகன், “உறுப்பினர்கள் பேசும் போது அமைச்சர்கள் சட்டசபையில் இருக்க வேண்டும். அதிகாரிகளை வைத்து ஆய்வு கூட்டம் நடத்த கூடாது.

ரங்கசாமி – நமச்சிவாயம்

உறுப்பினர் பேசும்போது, சில கோரிக்கைகள் வைப்பார்கள், அதை அமைச்சர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். முதலமைச்சரின் காதோடு காதாக உள்துறை அமைச்சர் பேசினார். இந்த நெருக்கத்தை தேர்தல் நேரத்தில் காட்டியிருந்தால் எவ்வளவோ பிரச்னை தீர்ந்து இருக்கும்” என்றார்.

அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “உறுப்பினர்கள் பலரும் வைக்கும் கோரிக்கையை முதலமைச்சருடன் பேசித்தான் தீர்க்க வேண்டும். அதைத்தான் முதலமைச்சரிடம் கூறிக் கொண்டிருந்தேன். எனக்கு எதிராக பெரும் சதியே நடக்கிறது. சபாநாயகர் உட்பட ஒரு குழுவே அதன் பின்னால் இருக்கிறது” என்றார். அப்போது எழுந்த எதிர்கட்சித் தலைவர் நாஜிம், “உள்துறை அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லையா…?” என்று கேட்டுவிட்டு அமர்ந்தார்.

இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Tvk: அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்; ஆனால் அனைவருக்கும் விலையில்லா சிலிண்டர் இல்லை!

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், தமிழ்நாடு முதலமைச்சர்...

அமைச்சர் மன்னிப்பு: “இனி இதுபோல நடக்கக் கூடாது" – மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

`இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியம் இல்லை' – மாணவியின் கோரிக்கையை நிராகரித்த உ.பி. உயர் நீதிமன்றம்

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களின் மத நம்பிக்கையாக இருந்து வருகிறது....

வர்த்தக விரிசலில் அமெரிக்கா, கனடா: இதில் யாருக்கு என்ன பிரச்னை? இது சரியாக வாய்ப்புகள் உண்டா?

"கனடா ஒரு மாநிலமாக இல்லாதபோதிலும், ஒரு அமெரிக்க மாநிலத்திற்கான அனைத்துப் பலன்களையும்...