12
September, 2026

A News 365Times Venture

12
Saturday
September, 2026

A News 365Times Venture

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" – BRICS மாநாட்டில் மோடி பேச்சு

Date:

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந்தியாவில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, “பிரிக்ஸ் அமைப்பு தனது மூன்றாவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த வேளையில், பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்…

பிரதமர் மோடி

3 வேண்டுகோள்கள்

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்திற்குத் தடையாக இருக்கும் முதன்மையான பத்து சிக்கல்களை நீக்குவது குறித்து ஒரு விரிவான அறிக்கையை உங்களால் தயார் செய்ய முடியுமா?

நமது உறுப்பு நாடுகளைச் சேர்ந்த ஆண்டுக்கு 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பிற பிரிக்ஸ் நாடுகளின் சந்தைகளிலும் தடம்பதித்து வளர நம்மால் உறுதுணையாக இருக்க முடியுமா?

நமது தொழிலமைப்புகளுக்கு இடையே ஆயிரம் புதிய கூட்டு ஒப்பந்தங்களை உருவாக்க முடியுமா?

இந்த மூன்று இலக்குகளின் முன்னேற்றம் குறித்து நாம் ஒவ்வோர் ஆண்டும் மறுஆய்வு செய்ய வேண்டும்.

பிரிக்ஸ் அமைப்பின் லட்சியங்களைச் செயல்பாடுகளாகவும், நமது கூட்டு வலிமையை உலகளாவியப் பிரச்னைகளுக்கான தீர்வுகளாகவும் மாற்றுவோம்.

பிரிக்ஸ் அமைப்பு முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், உலகையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லட்டும்” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தலைவரோட ரேஸிங் சூட்டோட போட்டோ எடுக்கணும்!' – குஷியான சி.எம் விஜய்; ஆரத்தழுவிய அஜித்!

லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக...

தூத்துக்குடி: இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம்; கற்பூரம் கொளுத்தி பஜனைப் பாடி வழிபட்டு வரும் ஊர் மக்கள்

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் ’இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சபை’யை கிறிஸ்தவ மதபோதகர்...

திமுக ஆர்ப்பாட்டம்:“பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சரை வச்சிட்டு எங்களை சொல்றீங்களா?" – மேயர் பிரியா

சட்டப்பேரவையில் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையிலும்,...

தாராபுரம் இடைத்தேர்தல்: "தவெகவிற்கு வரலாறு காணாத வெற்றி உறுதி" – அமைச்சர் அருண்ராஜ் நம்பிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு...