24
August, 2026

A News 365Times Venture

24
Monday
August, 2026

A News 365Times Venture

பிரதமர் மோடி பெயரை மறந்த நிதிஷ் குமார்: சுதாரித்துக்கொண்டு மாற்றி பேசி சமாளிப்பு! – வைரல் வீடியோ

Date:

இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்த தேர்தலுக்கான பரப்புரையை பா.ஜ.க திட்டமிட்டு தொடங்கிவிட்டது. நேற்று பிரதமர் மோடி பீகாருக்குப் பயணம் மேற்கொண்டார். காரகாட்டில் நடந்த பேரணியிலும், பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

மோடி – நிதிஷ் குமார்

அந்தக் கூட்டத்தில் பீகார் முதல்வரும், என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான நிதிஷ் குமார் கலந்துகொண்டார். அப்போது நிதிஷ் குமார் உரையாற்றும் போது, பிரதமர் மோடியைக் குறிப்பிடுவதற்கு பதிலாக பிரதமர் வாஜ்பாய் எனக் கூறி பிரதமர் மோடியின் பெயரை மறந்துவிட்டார். அதன் பிறகு அதை சுதாரித்துக்கொண்டு, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியைப் போல நாடு வளர்ச்சியடைகிறது எனப் பேசினார். நிதிஷ் குமாரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுடன், ஜனவரி மாத தொடக்கத்தில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்தும் போது குமார் திடீரென கைதட்டும் வீடியோ, மார்ச் மாத தொடக்கத்தில், பாட்னாவில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்வில் தேசிய கீதத்தின் போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சிரித்து அரட்டை அடிக்கும் வீடியோ ஆகியவையும் இணைத்து வைரலாக்கப்படுகிறது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'வருஷநாடு பகுதி அரசு ஊழியர்கள் 118 பேர் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும்' – தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில், கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை,...

"தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியம்.!"- தங்கம் தென்னரசு சொல்வதென்ன?

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று...

தனியார் தொழிற்சாலையில் ஆய்வுக்குச் சென்ற தவெக எம்.எல்.ஏ; 6 பிரிவுகளில் வழக்கு! – பின்னணி என்ன ?

புதுச்சேரியில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை...

"கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்" – கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் த.வெ.க அரசின் 100 நாள் சாதனை விளக்கக்...