23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

பாமக: `மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது!' – ராமதாஸ், அன்புமணிக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

Date:

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி ராமதாஸ் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்குச் சின்னம் தொடர்பான கடிதத்தை அனுப்பியதை அடுத்து, அவரே கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டதாக அவரது தரப்பினர் கொண்டாடினர். இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.

அன்புமணி, ராமதாஸ்

இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் மோதிக்கொண்டனர்.

ராமதாஸ் தரப்பு வாதம்: “கட்சிக்குள் உரிமை கோரல் பிரச்சனை இருக்கும்போது, தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால், விதிகளை மீறி ஒரு தரப்புக்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. சின்னம் யாருக்கு என்று முடிவாகும் வரை ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்க வேண்டும். இல்லையெனில் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

கட்சி தொடர்பான வழக்கு மற்றும் சின்னம் தொடர்பான பிரச்சனை எழும் பட்சத்தில் கட்சி யாருக்கு என்று முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்க வேண்டும். ஏற்கனவே தேர்தல் ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது பிரச்சனை எழும்ப பட்சத்தில் சின்னம் முடக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தற்போது வழக்கை தாக்கல் செய்திருக்கிறோம்.

தலைமை நீதிபதி: “இது எங்களுக்கு குடும்ப பிரச்சினை போல் தான் தெரிகிறது

மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதா?”  என தலைமை நீதிபதி கேள்வி

ராமதாஸ் தரப்பு: “இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை”

அன்புமணி தரப்பு: “தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின்படி அன்புமணி தான் தலைவர். அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் தலையிட முடியாது. ஏற்கனவே எங்களுக்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தை பொருத்தவரைக்கும் தெளிவுபடுத்தி விட்டது. தங்களிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தான் தலைவராக இருக்கிறார் என்று கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. மேலும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்று தெளிவாக விதி உள்ளது”

உச்ச நீதிமன்றம்

தலைமை நீதிபதி: “தேர்தல் ஆணையம் கட்சிக்குள் பிரச்சனை எழுந்தால் தலையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் உரிமைக்குரல் விவகாரத்தில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்கி வைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறது

பாட்டாளி மக்கள் கட்சி சின்ன விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிகவும் பாதுகாப்பான முறையில் பிரண்ட்லி மேட்ச் விளையாடுகிறது” என்று தெரிவித்தது.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு: “`ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இரு தரப்பினரும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக 2 நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்களின் அடிப்படையில், சிவில் நீதிமன்றம் அடுத்த 3 நாட்களுக்குள்ளாக வழக்கை விசாரித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

உத்தரவைப் பிறப்பித்த பிறகு கலகலப்பாகப் பேசிய தலைமை நீதிபதி, ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பைப் பார்த்து, “நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது” எனச் சிரித்தபடி நகைச்சுவையாகக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் பாமகவின் “மாம்பழம்” சின்னம் யாருக்கு என்பது உறுதியாகத் தெரியவரும்.’

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எரியாத அடுப்புகள்- அனுபவக் கொடுமைகள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது....

இறுதி வரை திக் திக்.! `புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடர்கிறது’ – கூட்டாக அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற  இருக்கும் நிலையில்,...

"5 நாள்களுக்குத் தாக்க மாட்டோம்" – ஈரான், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

ஈரான் போர் நான்காவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'எப்போது இந்தப் போர்...

அதிமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம்; அதிமுக அலுவலகத்தில் டிடிவி! யார் யாருக்கு எவ்வளவு?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி...