26
April, 2026

A News 365Times Venture

26
Sunday
April, 2026

A News 365Times Venture

"பாதுகாப்பு குறைப்பாடே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம்" – ட்ரம்ப் பேச்சு

Date:

நேற்று வாஷிங் டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டின்னர் நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா ட்ரம்ப், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனால், அங்கே திடீரென துப்பாக்கி சூட்டை ஒருவர் நடத்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அந்தக் குற்றவாளியும் கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கி சூட்டு குற்றவாளியின் புகைப்படத்தை ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ட்ரம்ப் பகிர்ந்த குற்றவாளியின் புகைப்படம்

அதன் பிறகு, இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசிய முக்கிய புள்ளிகள்…

> இது மிகவும் எதிர்பாராத ஒரு சம்பவம் ஆகும். ஆனால் ரகசிய சேவை மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் இந்தச் சம்பவத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டனர்.

> இந்தச் சம்பவத்தில் ஒரு அதிகாரி துப்பாக்கியால் சுடப்பட்டார். ஆனால், அவர் உயர்தர குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார்.

குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்திருந்ததால், மிக அருகில் இருந்து சக்திவாய்ந்த துப்பாக்கியால் சுடப்பட்டும், அவரை அது காப்பாற்றியது.

நான் அந்த அதிகாரியிடம் பேசினேன்… அவர் நலமாக இருக்கிறார்.

> இன்றிரவு (நேற்று) நடந்த சம்பவங்கள் ஆராயப்பட்டது. இந்த கட்டடம் போதிய பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

இதைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, ஆனால், இதனால்தான் வெள்ளை மாளிகையில் நாங்கள் திட்டமிட்டுள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அவசியமாகின்றன.

அது – மிகப்பெரிய அறையாகவும், டிரோன் தாக்குதல்களைத் தாங்கும் திறன் மற்றும் குண்டு துளைக்காத கண்ணாடிகளுடன் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

> கடந்த இரண்டு ஆண்டுகளில், தாக்குதல் நடப்பது முதல் முறை அல்ல. பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்ததை நீங்கள் அறிவீர்கள்… அதற்கு சில மாதங்களுக்குப் பிறகு புளோரிடாவின் பாம் பீச்சிலும் நடந்தது. அப்போதும் சட்ட அமலாக்கத் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

எல்லா பதிவுகளுக்கும் ஆதார் கார்டை கேட்கிறார்களே; ஆனால், 'இந்த' பதிவுகளுக்கு ஆதார் கார்டு செல்லாது!

வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம்...

"ட்ரம்ப் காயமின்றி தப்பிய செய்தி கேட்டு நிம்மதி அடைகிறேன்" – மோடி பதிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம்...

மணிப்பூர்: முதல்வர் வீட்டருகே அரங்கேறிய போர்க்களம்: 22 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ராங்லாபி பகுதியில்...

ஆப்ரேஷன் லோட்டஸ்: “துரோகி" – ஹர்பஜன் சிங் வீட்டுச் சுவற்றில் எழுதிய போராட்டக்காரர்கள்

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப்...