1
April, 2026

A News 365Times Venture

1
Wednesday
April, 2026

A News 365Times Venture

பாஜக-வில் இணைந்த பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயாஸ் – மே.வங்க தேர்தலில் போட்டியா?!

Date:

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலோடு சேர்ந்து மொத்தம் 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் நடக்க இருக்கும் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் மேற்கு வங்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பரபரப்பான சூழலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயாஸ் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.

அவர் இன்று டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் மற்றும் சுகந்தா ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

லியாண்டர் பயாஸ்

கட்சியில் சேர்ந்த பிறகு லியாண்டர் பயாஸ் அளித்த பேட்டியில், “நாட்டின் இளைஞர்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தருணம் எனது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வாய்ப்பிற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியில் சேர்ந்தது ஒரு உறுப்பினராக மட்டுமல்லாமல் தேசத்திற்கு சேவை செய்யும் முக்கிய பொறுப்பு இருப்பதால் சேர்ந்துள்ளேன். நான் மேற்கு வங்கத்தில் பிறந்து, பெங்காலி பாரம்பர்யத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

லியாண்டர் பயாஸ் தாயார் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில் பா.ஜ.க தலைவர் நிதின் நபினை கொல்கத்தாவில் லியாண்டர் பயாஸ் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து பயாஸ் பா.ஜ.க-வில் சேர்ந்து இருக்கிறார். அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வாய்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: விஜய் முன் நிறுத்தப்பட்ட `திடீர்' வேட்பாளர் – திக்குமுக்காடும் திருப்பத்தூர் தவெக!

திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க-வில், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்தவர் டாக்டர்...

ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத்...

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! – நடந்தது என்ன?

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான...