திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,
“திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும். மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள்.
மோடியா, லேடியா என ஜெயலலிதா கேட்டது, பிரதமராக மோடி வேண்டுமா, முதலமைச்சராக ஜெயலலிதா வேண்டுமா என்கிற அடிப்படையில்தான். பெரியார் கூறிய கருத்தைத்தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதில் எந்த தவறும் இல்லை.
தி.மு.க திருந்தியிருக்கும் என நம்பித்தான் கடந்த 2021-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தி.மு.க-விற்கு வாக்களித்தார்கள். ஆனால், அவர்கள் திருந்தவில்லை” என்றார்.