8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

பாஜக கூட்டணியில் தவெக? "EPS-ஸிடம்தான் கேட்க வேண்டும்; ஏனென்றால்" – பியூஸ் கோயலின் பதில் என்ன?

Date:

அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்யின் தவெக-வை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று (மார்ச். 10) செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்கப்பட்டிருக்கிறது.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

அதற்குப் பதிலளித்த அவர், “இதைப் பற்றி நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்க வேண்டும்.

அவருக்குத்தான் இது குறித்து நன்றாகத் தெரியும். இதுவரைக்கும் எங்கள் கூட்டணியில் எடப்பாடி, நயினார், தினகரன், அன்புமணி, ஜி.கே வாசன் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியிருக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ஒரு வலுவான கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்திப்போம்.

 பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இருந்தாலும் கட்சிகளின் எண்ணிக்கையை விட மக்களிடம் இருக்கும் செல்வாக்கும், வாக்கு வங்கியும்தான் முக்கியம். அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக: “மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்படும் அவமதிப்பு!" – நடிகை ஸ்ரேயா சரண் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

தவெக: “திமுக – அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” – நடிகர் விஷால் எச்சரிக்கை

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர்...

TVK: “2 பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்க…" – எம்.பி மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

`மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது; நிலையான ஆட்சி என்பதே…' – திமுக எம்.எல்.ஏ-க்கள் தீர்மானம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும்...