6
August, 2026

A News 365Times Venture

6
Thursday
August, 2026

A News 365Times Venture

பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; ஒருவர் தலைமறைவு

Date:

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

பின் திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்ருதீன் இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ஜஸ்டின் மணிகண்டன்

மேலும் இவ்வழக்கில் தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி வழக்கறிஞர் அன்வர்தின் ஆகியோரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றம் 4 பேரையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரையும் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பின் திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4 பேரையும் 05.08.26 மதியம் முதல் வெள்ளி 07.08.26 மதியம் வரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நிபந்தனையுடன் நீதிபதி உத்தரவிட்டார்.

பழனி நிலம்
பழனி நிலம்

இவ்வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த ஜாமீன் உத்தரவு ஆகஸ்ட் 3ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று 05.08.26 ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ராஜசேகர், இருவரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 இதனையடுத்து இன்று (06.08.26) திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானலில் பதுங்கி இருந்த நிலையில் அவரைக் கைது செய்து திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். இடைத்தரகர் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் தலைமறைவு ஆகியுள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டில் காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே நிலையில் அவரது மனைவி செண்பகமதி உட்பட 8 நபர்களிடம் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி அமைச்சரவையில் யாருக்கு என்னென்ன துறைகள்?

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியுடன் 2026 தேர்தலில் வெற்றிபெற்ற ரங்கசாமி, மே மாதம் 13-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்....

வேளாண் பட்ஜெட்: "பழைய பட்ஜெட் புத்தகத்தையே திருப்பி வாசித்திருக்கின்றனர்" – MRK பன்னீர்செல்வம்

இன்று தங்களுடைய முதல் வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது தவெக அரசு....

தஞ்சாவூர்: உதயநிதி கைது விவகாரத்தில் போராட்டம்; திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில், கடந்த 3ம் தேதி, தஞ்சாவூரில், காவிரி...

புதுச்சேரி: இரண்டு நீதிமன்றங்களில் உறுதியான தண்டனை; ஆனாலும், முன்னாள் எம்எல்ஏ விடுதலையானது எப்படி?

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் 1997 முதல் 2006-ம் ஆண்டு வரை...