27
August, 2026

A News 365Times Venture

27
Thursday
August, 2026

A News 365Times Venture

'பரிதாபத்தில்தான் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தினீர்களா?' – அவையில் வன்னி அரசு சரமாரி கேள்வி!

Date:

அமைச்சர் வன்னி அரசுவின் சமூகநீதித்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. விவாதத்தின் போது சில திமுக, அதிமுக உறுப்பினர்கள், ‘நாங்கள் தலித்தை பொதுத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறோம்’ என பேசியதற்கு அமைச்சர் வன்னி அரசு கடுமையாக பதிலளித்திருந்தார்.

வன்னி அரசு

அமைச்சர் வன்னி அரசு பேசியதாவது, ‘தலித்தை பொதுத்தொகுதியில் நிறுத்தினோம் என திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேசினார்கள். இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா? இல்லை பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்களா? என்னைப் பொறுத்தவரை நீங்கள் பச்சாதாபத்தின் அடிப்படையில் பேசுவதைப் போலத்தான் தெரிகிறது.

கடந்த முறை நாங்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்தோம். உண்மையாகவே கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறீர்கள் என்றால் எங்களுக்கு ஏன் அதிகாரத்தில் பங்கு கொடுக்காமல் விட்டீர்கள்? இப்போது 2 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் ஒருவருக்கு இந்த அரசு அதிகாரம் கொடுத்திருக்கிறது.

வன்னி அரசு
வன்னி அரசு

சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட கிராமங்களிலிருந்து வந்தவன் நான். அங்கே சாதியக் கொடுமைகள் எப்படியிருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் புதிய சட்டை போட்டால் வெள்ளை சட்டை போட்டால் இவனுக்கு வந்த வாழ்வை பார் என்பார்கள். அப்படியொரு இடத்திலிருந்து வந்திருக்கிறோம்’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மோடி அரசின் பிடிவாதத்திற்குப் பிஞ்சுக் குழந்தைகளின் கல்வியைப் பணயம் வைப்பதா?" – மாணிக்கம் தாகூர்

மத்திய அரசு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை நிறுத்திவைத்து பிளாக்மெயில் செய்வதாக...

'திமுக அரசு மதவாதிகளுடன் கரம் கோர்த்து அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டத்தை முடக்கியது!- ஆதவ் ஆவேசம்!

சமூகநீத்துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் சட்டமன்றத்தில் இன்று நடந்திருந்தது. இந்த...

`சட்டமன்றம் தனிநபர் மோதல்கள் நிறைந்த 'டிராமா மன்றமாக' மாறிவிடக் கூடாது!' – அண்ணாமலை

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'வீ தி லீடர்ஸ்'...

'விமர்சித்த உதயநிதி; மாலையில் திடீரென அவைக்குள் வந்த முதல்வர் விஜய்!' – பின்னணி என்ன?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர்...