16
March, 2026

A News 365Times Venture

16
Monday
March, 2026

A News 365Times Venture

நயினார் நாகேந்திரனை சந்தித்த இரண்டு காவலர்கள் பணியிட மாற்றம் – திருப்பூரில் நடந்தது என்ன?

Date:

திருப்பூரில் நேற்று முன்தினம் பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். பேரணி முடிந்த பின், அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மந்திரம் மற்றும் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் சின்னசாமி ஆகிய இருவரும் நேரில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் நயினார் நாகேந்திரனை இருவரும் சீருடையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. எனினும், காவல் துறை சீருடையுடன் சென்று பேசியதால் அவர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

இதேபோல திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் குற்றப் பிரிவில் பணியாற்றி வரும் தலைமைக் காவலர் நல்லசாமி. இவர் குற்றவாளி ஒருவரின் மனைவியிடம் செல்போனில் அழைத்து தவறாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரை மாநகர காவல் ஆணையர் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் 3 பேர் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது திருப்பூர் மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK : 'மாமல்லபுரத்தில் இஃப்தார் விருந்தில் கலந்துகொள்ளும் விஜய்!' – தவெக அப்டேட்

தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இஃப்தார்...

தேனி மாவட்டத்தில் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ள வாக்குச்சாவடி! – காரணம் என்ன?

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும்...

Trump: "ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க சீனா உதவ வேண்டும்" – ட்ரம்ப்பின் நிபந்தனையும் சீனாவின் பதிலும்

அமெரிக்கா - ஈரான் போரினால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்ணை...

சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி – எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10

எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்!முதல் களம் 101989-ஆம் ஆண்டு சட்டமன்ற...