26
March, 2026

A News 365Times Venture

26
Thursday
March, 2026

A News 365Times Venture

நடக்க இருக்கும் புதின், ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு; இருவரும் ஒப்புகொள்ள காரணம் என்ன? – ஓர் அலசல்

Date:

‘ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரப் போகிறதா?’ என்ற ஆவல் உலகமெங்கிலும் மேலோங்கி உள்ளது. உலக நாடுகளின் நீண்ட நாள் முயற்சி… அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முக்கிய தேர்தல் வாக்குறுதி… நிறைவேறப் போகிறதா?

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரும் நேரில் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சிகளும், பேச்சுவார்த்தைகளும் அனைத்தும் தொடர் தோல்விகளைத் தழுவி வந்த நிலையில், இப்போது இவர்கள் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.

புதின், ஜெலன்ஸ்கி

ரஷ்யாவின் உள்ளூர் நேரப்படி நேற்று (மே 11) மதியம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், புதின் நேரடி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பேசியுள்ளார்.

இதற்கு ஜெலன்ஸ்கியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முழு மற்றும் நீடித்த போர் நிறுத்தத்திற்காகக் காத்திருக்கிறோம்.

இன்னும் மரணங்களை நீடிப்பதில் அர்த்தம் இல்லை. வியாழக்கிழமை புதினுக்காகத் துருக்கியில் காத்திருப்பேன். இந்த முறை ரஷ்யர்கள் எந்தச் சாக்குப்போக்கையும் தேட மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏன் புதின் நேரடி சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டார்?

மூன்று ஆண்டுகளைக் கடந்தும் ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதை முடித்துவைக்கப் பல முயற்சிகள் சென்றுகொண்டே இருக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, கடந்த சனிக்கிழமை (மே 10) உக்ரைன் தலைநகரம் கீவில் நடந்த சந்திப்பு ஒன்றில் ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அந்தச் சந்திப்பில், “புதின் வரும் திங்கட்கிழமை (இன்று) முதல் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கப்பட்டது.

இதிலிருந்து தப்பிக்கவே தற்போது புதின் நேரடி சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவர் போர் நிறுத்த நிபந்தனை பற்றி வாய் திறக்கவே இல்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டால்தான் பேச்சுவார்த்தை என்று ஐரோப்பிய நாடுகள் கூற, ட்ரம்போ, உடனடியாக இருவரின் சந்திப்பும் நடந்தாக வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

இதனால், வேறு வழியின்றி, ஜெலன்ஸ்கியும் புதினுடனான சந்திப்பிற்கு ஒப்புக்கொண்டார்.

ஜெலன்ஸ்கியின் நிலை..?

ரஷ்யாவைவிட உக்ரைன் மிகச் சிறிய நாடு. ரஷ்யா உக்ரைனைவிட 28 மடங்கு பெரிதானது. உக்ரைன் நாட்டின் பொருளாதாரமும் அவ்வளவு பெரிதல்ல.

அதனால், போர் ஆரம்பித்த சில நாள்களிலேயே ரஷ்யா உக்ரைனைக் கைப்பற்றிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை உக்ரைன் இந்தப் போரில் முட்டி மோதித் தப்பிக்கொண்டு வருகிறது. இதற்குப் பிற நாடுகளின் உதவி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த உதவிகளில் அமெரிக்காவின் உதவி மிக மிக முக்கியமானது.

உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து பெரியளவில் நிதி வழங்கி வருவதை ட்ரம்ப் விரும்பவில்லை. அவர் இதனால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது என்று கருதுகிறார்.

இதனால், இந்தப் போரைச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ட்ரம்ப் நினைக்கிறார். இதற்குப் புதின், ஜெலன்ஸ்கி என யார் தடையாக இருந்தாலும், அவர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்த ட்ரம்ப் தயார்.

ட்ரம்பின் இந்த அழுத்தத்தால்தான், புதின் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை என்றாலும், ஜெலன்ஸ்கி புதினைச் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

துருக்கியில்…

இந்தப் பேச்சுவார்த்தை வரும் வியாழக்கிழமை துருக்கியில் நடக்க உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை எப்படி முடிய உள்ளது என்று பார்க்க உலகமே காத்திருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"எங்களது முடிவு பல பேரின் தூக்கத்தை கெடுக்கும்; விஜய்யுடன் கூட்டணியா.!"- வேல்முருகன் பேச்சு

திமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்...

திடீரென டிஜிபி அலுவலகத்தில் விஜய்; யார் மீது புகார் கொடுத்தார்? – விவரம் என்ன?

தவெக தலைவர் விஜய் திடீரென சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று...

பாமக: 'மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க முடியாது'- ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பா.ம.க கட்சி ராமதாஸ் - அன்புமணி என இருவருக்கும் இடையிலான மோதலால்...

“அடுத்த 60 நாள்களுக்கு…" – இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை வதந்திக்கு மத்திய அரசு விளக்கம்!

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை...