2
March, 2026

A News 365Times Venture

2
Monday
March, 2026

A News 365Times Venture

தொகுதிப் பங்கீடு: "எங்கள் வலிமைக்கு ஏற்ப அதிகாரப் பகிர்வு அமைய வேண்டும்" – திருமாவளவன் சொல்வது என்ன?

Date:

அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 2) திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன் தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க பேச்சுவார்த்தை நடத்தியது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “திமுக குழுவினரோடு, விசிக சார்பில் நானும் கட்சியின் பொதுச்செயலாளர்களான சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகிய மூவரும் பேச்சுவார்த்தையில் பங்குபெற்றோம்.

2026 சட்டமன்றத் தேர்தல் வழக்கமான சராசரியான பொதுத்தேர்தல் அல்ல.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

இந்தத் தேர்தலில் வலதுசாரி சக்திகளைக் காலுன்ற விடாமல் தடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடும் மதச்சார்பற்றக் கூட்டணியை நூறு விழுக்காடு உறுதிப்படுத்த வேண்டும் என்கிற அக்கறையோடும் இந்தக் கூட்டணியில் விசிக ஒரு அங்கமாக இருக்கிறது என்ற உரிமையோடும் எங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் திமுக-வோடு பேரம் பேசுகின்ற கட்சியாக இல்லை.

திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது தமிழ்நாட்டிற்கு வெற்றி.

தமிழக மக்களுக்கான வெற்றி. சமூக நீதிக்கான வெற்றி என்கிற புரிதலோடு எங்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து கருத்துகளை நாங்கள் மனம் திறந்து பகிர்ந்துகொண்டோம்.

எங்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது எங்களுடைய பங்களிப்பிற்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தெரியப்படுத்தினோம்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு
திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

அதிகாரப் பகிர்வு என தொகுதிப் பகிர்வைத்தான் சொல்கிறோம். திமுக தரப்பில் எங்கள் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்கள்.

தலைவரோடு நாங்கள் விவாதித்த பின்னர் மீண்டும் நாங்கள் அழைப்பு விடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

இன்று நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நிபந்தனையற்ற மன்னிப்பு கோரத் தயார்' – மாவட்ட ஆட்சியர் அபிடெவிட் மனு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்கு  நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அமர்வில்...

Modi: மரத்தில் மோடி உருவப்பொம்மை; மின்கம்பத்தில் ராகுல் உருவப்பொம்மை; குமரியில் என்ன நடக்கிறது?

பிரதமர் மோடி நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மேலும், திருப்பரங்குன்றம்...

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: தற்காப்பு எனும் பெயரில் ஐரோப்பிய நாடுகளும் இணைகிறதா?

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடுத்துள்ள போர் மூன்றாவது நாளாக இன்று...

மதுரை தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநாடு: கைகோத்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் | Photo Album

``காங்கிரஸ், திமுகவை 'கோ-பேக்' சொல்லி திருப்பி அனுப்புங்கள்!" – புதுச்சேரியில் சீறிய...