13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

Date:

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. கொட்டக்குடி, குரங்கணி, முதுவார்குடி, சென்டிரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன.

போடியில் இருந்து குரங்கணி, செண்டிரல் ஸ்டேஷன், கொட்டக்குடி கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி அமைக்கபட்டுள்ளது. ஆனால் குரங்கணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

குரங்கணிக்கு 1 கி.மீ. தூரத்துக்கு முன்பாக கொட்டக்குடி சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள கொட்டக்குடிக்குச் செல்லும் சாலையில் பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது.

இதனால் இந்தக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஜீப் அல்லது நடந்துதான் செல்ல வேண்டும். மேலும்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடந்தும், ஆட்டோக்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் கொட்டக்குடி சாலை சந்திப்பு வரை வந்து அங்கிருந்து பஸ்களில் சென்று வருகின்றனர்.

தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து

கொட்டக்குடிக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் அங்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தங்கள் கிராமத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த வாரம் தேனி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று கொண்ட வைத்திநாதன், கொட்டக்குடிக்கு அரசு பஸ் சேவை தொடங்குவது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். 

தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து
தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து

அதன் படி போடியில் இருந்து குரங்கணிக்கு காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தை கொட்டக்குடி சாலையில் இயக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து வேறு அரசுப் பேருந்தை கொட்டக்குடிக்கு நேற்று சோதனை முறையில், அதிகாரிகள்  இயக்கிப் பார்த்தனர்.

அந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமையவே, நேற்று மாலை முதல் கொட்டக்குடி கிராமத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த அரசுப் பேருந்து போடியில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் கொட்டக்குடிக்கு இயக்கப்படவுள்ளது.

கொட்டக்குடி கிராமத்துக்கு முதல் முறையாக பேருந்து சேவை  தொடங்கியுள்ளதால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக – அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக...

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...