2
November, 2026

A News 365Times Venture

2
Monday
November, 2026

A News 365Times Venture

தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்

Date:

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்துக்காக 485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. அதில், எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் 450 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மீண்டும் உரியவர்களிடமே விடுவிக்கப்பட்டதாகவும், 23 ஏக்கர் 84 சென்ட் நிலம் மட்டும் விடுவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 23 ஏக்கர் 84 சென்ட் நிலங்களையும் விடுவிக்கக்கோரி அதில் வசிக்கும் மக்கள் அக்டோபர் 8-ம் தேதி முதல் இரவு, பகலாக கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் 26-வது நாளான இன்றைய தினம், வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்துகொண்டிருந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜிடம் போராட்டக்காரர்கள் பதாகைகளைக் காண்பித்து காரை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

தேசிய நெடுஞ்சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள்

அமைச்சரின் வாகனமும், அவருடன் வந்த பாதுகாப்பு வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து இறங்கிவந்த அமைச்சர் காந்திராஜின் காலில் போராட்டக்காரர்களில் ஒருவர் திடீரென விழ முயன்றார். அவரைத் தடுத்த அமைச்சர் மனுவைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கவனப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து, அமைச்சருக்கு `நன்றி’ தெரிவித்துவிட்டு போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறினர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பான சூழ்நிலையும் காணப்பட்டது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பாசிசத்திற்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்" – 'இந்தியா' கூட்டணி பேரணியில் பங்கேறாத தவெகவைச் சாடிய ஆ.ராசா

டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடந்த...

'10 கோடி நிலமோசடி… முதல்வருக்கு மனு' – தவெக வேட்பாளரை அடைத்து வைத்ததன் பின்னணி என்ன?

நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றிருந்தார். அங்கே...

Vijay: 'அடிக்கல் நாட்டு விழா முதல் திறப்பு விழா வரை' – முதல்வர் விஜய் புதுக்கோட்டை விசிட்! | Photos

"தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன" - ஸ்டாலின்...

"'Take Diversion!' முதலீட்டைத் தாரை வார்கிறது தவெக" – 'திருமலை' பட காமெடியை வைத்து இபிஎஸ் விமர்சனம்

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு...