25
March, 2026

A News 365Times Venture

25
Wednesday
March, 2026

A News 365Times Venture

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

Date:

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவும் மட்டுமே. இந்நிலையில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு டபுள் டிஜிட்டலில் தொகுதிகள் ஒதுக்கப்படவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. நிலவரம் என்னவென விசாரித்தோம்.

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுக்கையில், ‘கட்சியில் 84 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் 90% பேர் திமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். வாக்கெடுப்பின் போது அந்த கருத்தை தெளிவாக சீட்டில் எழுதியும் கொடுத்தனர். அதன்படிதான் அண்ணியார் திமுகவுடன் கூட்டணி பேசி முடித்தார்.

ராஜ்ய சபா சீட்டும் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்பதில் அண்ணியார் உறுதியாக இருந்தார். கடந்த 2021 தேர்தலிலேயே சீட்டு எண்ணிக்கை ஒத்துவராததால்தான் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தினகரனுடன் இணைந்து போட்டியிட்டார். அதனால் திமுகவில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் தேமுதிகவுக்கான ஏற்ற இடத்தை அண்ணியார் உறுதி செய்துவிடுவார் என நம்பினோம்.

அதன்படி திமுக தலைமையிடம் 12 சீட்டுகளை அண்ணியார் கேட்டிருக்கிறார். டபுள் டிஜிட்டில் தொகுதி ஒதுக்கப்படும் என உறுதி கொடுத்ததால்தான் கூட்டணிக்கே ஒப்பும் கொண்டார்.

பிரேமலதா
எல்.கே.சுதீஷ், பிரேமலதா, ஸ்டாலின்

நேற்று நடந்த மா.செக்கள் கூட்டத்திலும், ‘நமக்கு 5-6 சீட்டுனு வெளிய பேசிக்குறாங்க. அதையெல்லாம் நம்ப வேணாம். கௌரவமான இடத்தைதான் பேசி முடிச்சிருக்கோம். நம்பிக்கையா இருங்க’னு மகிழ்ச்சியா பேசியிருந்தார். குறைந்தபட்சம் 10 தொகுதியையாவது அண்ணியார் வாங்கிட்டு வந்துடுவாங்க. அதனாலதான் திமுகவும் மற்ற கட்சிகளோட கையெழுத்து போட்டுட்டு கடைசியா எங்களை கூப்பிடுறாங்க. இன்று இரவோ அல்லது நாளையோ அண்ணியார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவார்’ என்கின்றனர்.

தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வரை கொடுக்க திமுக தயாராக இருப்பதாகவும், ஆனாலும் இயன்றவரை பேசி 9 இல் முடிக்க முயற்சிப்பதாகவும் அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் – சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன்...

'தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது' மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த...

'என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!'-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மாநில தலைவராகவும் இருந்தவர் திருநாவுக்கரசர். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக இருந்த இவருக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தொகுதியில் இவரது மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். அங்குள்ள தி.மு.க-வினர், 'இந்தமுறை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்' என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் ஆதரவாளரான மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தீர்மானம் போட்டு, தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்."காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை" என்றார்.திருநாவுக்கரசரின் சீட் பெறும் 'ஆடுபுலி ஆட்டம்' என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்! Source link

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' – தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி...