3
July, 2025

A News 365Times Venture

3
Thursday
July, 2025

A News 365Times Venture

திமுக: நாமக்கல் மேற்கு மா.செ மதுரா செந்தில் `திடீர்’ மாற்றம் – பதவி பறிப்போனதன் பின்னணி என்ன?

Date:

தேர்தலுக்கு தயாராகும் திமுக

தி.மு.க தலைமை 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி வேகமாய் காய் நகர்த்தி வருகிறது. அதன் வெளிபாடு தான் தி.மு.க-வில் சர்ச்சைக்குரிய மாவட்டச் செயலாளர்கள் சமீபகாலமாக மாற்றப்பட்டு வருகின்றனர். அதில், ஒரு சில மாவட்டத்திற்கு புதிதாக ஆற்றல்மிக்கவர்களையும், ஏற்கனவே மாவட்டச் செயலாளராக இருந்தவர்களையும் தேர்ந்தெடுத்து மீண்டும் பொறுப்புகள் கொடுத்து வருகிறது.

அந்த வகையில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமான சேலம், கிருஷ்ணகிரி, தரிமபுரி, நாமக்கல் ஆகியவற்றிலும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் இருக்கலாம் என்று தி.மு.க வட்டாரங்களில் பேச்சு நிலவி வந்தது.

இந்த நிலையில் இன்று 19.02.2025 காலை, தி.மு.க தலைமையில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரான மதுரா செந்தில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அதற்கு பதில் கே.எஸ்.மூர்த்தி மேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று அறிவிப்பு வெளியாகியது.

வெளியான அறிவிப்பு!

இந்த அறிவிப்பு வெளியான பின், நாமக்கல் மாவட்ட அரசியல் வட்டாரங்களில், எதனால் இந்த திடீர் மாற்றம் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் பரவலாக பரவிவருகிறது. மதுரா செந்தில் மாற்றத்திற்கான சரியான காரணம் தெரியாமல் கட்சிக்குள்ளேயே பலர் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

யார் இந்த மதுரா செந்தில்?

கொங்கு சமூகத்தை சேர்ந்த மதுரா செந்தில், 2008 ஆம் ஆண்டு முதன்முதலில் கொங்கு மக்கள் கட்சியில் இணைந்து, 2011 ஆம் ஆண்டு எலட்சிபாளையம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் நின்று தோல்வியடைந்தார். அதன்பின் தி.மு.க-வில் இணைந்தார் மதுரா செந்தில். 2014 ஆம் ஆண்டு நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் தி.மு.க தோல்வியடந்தது. அப்போது ஒன்றுப்பட்ட மாவட்ட செயலாளராக இருந்துவந்தவர் 2009 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காந்தி செல்வன்.

2014 ஆம் ஆண்டு திமுக தோல்வியடைந்ததால் மாவட்டத்தினை இரண்டாக பிரித்த தி.மு.க தலைமை. நாமக்கல் கிழக்கு மாவட்டம், மேற்கு மாவட்டம் என்று இரு மாவட்டங்களாக ஆக்கியது.

அப்படி கிழக்கு மாவட்டச் செயலாளராக காந்தி செல்வனும், மேற்கு மாவட்டச் செயலாளராக காந்தி செல்வனின் தீவிர ஆதரவாளரான கொங்கு சமூகத்தை சேர்ந்த கே.எஸ்.மூர்த்தியும் நியமிக்கப்பட்டனர். அப்போது, நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக இருந்தவர் வேட்டுவக் கவுண்டர் சமூதாயத்தைச் சேர்ந்த இறைமங்கலம் சுரேஷ். இவருக்கும் கே.எஸ் மூர்த்திக்கும் அரசியல் மோதல்கள் அடிக்கடி நிலவத்தொடங்கியது. இதனால், கே.எஸ் மூர்த்தி தனது ஆதரவாளரான மதுரா செந்திலை மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக கொண்டு வந்தார். அப்படி மதுரா செந்தில் முதன்முதலாக தி.மு.க-வில் பெற்ற பதவி இதுதான்.

கே.எஸ் மூர்த்தி

மாவட்டச் செயலாளரானது எப்படி?

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, கே.எஸ்.மூர்த்தியின் மாவட்டத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் தங்கமணியை எதிர்த்து போட்டியிட்டவர் தி.மு.க வேட்பாளரான பங்கு வெங்கடாசலம், மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதுமட்டுமல்லாது 2016 தேர்தலில் பரமத்தி சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றிப்பெற்ற கே.எஸ்.மூர்த்தி, 2021 தேர்தலில் நிலையில் தோல்வியடந்தார். அதற்கு காரணமாக இருந்தது பரமத்தி தொகுதியில் மெஜாரட்டி வாக்குகளான வேட்டுவக்கவுண்டர் வாக்குகள் தி.மு.க-வுக்கு எதிராக பதிவாகியது தான். இதற்கு உதாரணம், அதே தேர்தலில் பரமத்தி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் வேட்டுவக்கவுண்டர் சமூதாயத்தை சேர்ந்த பெண் வேட்பாளர் கபிலர் மலை ஒன்றியத்தில் அமைந்துள்ள வேட்டுவக் கவுண்டர் ஓட்டுகளை முழுவதுமாக பெற்றார். அந்த தேர்தலில் கிட்டத்தட்ட 1,200 ஓட்டுகள் வித்யாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரிடம் கே.எஸ் மூர்த்தி தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் நகராட்சி தேர்தலின்போது, திருச்செங்கோடு நகராட்சியில் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முதலியார் சமூகத்தை சேர்ந்த கார்த்திக்கேயன். ஆனால், முதலியார் சமூகத்தில் ஒருவர் தலைவராக வந்திட கூடாதென்று, மற்ற சமூகத்தினர் எதிர்ப்பினை தெரிவித்துவந்தனர். அதனால் கார்த்திகேயனுக்கு எதிராக நின்ற நாயுடு சமூதாயத்தை சேர்ந்த நளினி சுரேக்ஷ் பாபு என்பவரை தலைவராக தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சில தி.மு.க – அ.தி.மு.க கவுன்சிலர்கள் முடிவு செய்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்து தலைமை அறிவித்த கார்த்திக்கேயனை திருச்செங்கோடு நகர துணைத் தலைவராக மாற்றினர். இதனை அப்போது கே.எஸ் மூர்த்தி சரியாக கையாளவில்லை என்று புகார் இருந்தது.

இதேபோல குமாரபாளையம் நகராட்சியில் தலைமை அறிவித்த தலைவர் ஒருவர், ஆனால் அங்கேயும் இதேப்போன்று பிரச்னை இருந்ததால் நகராட்சி தலைவராக விஜய் கண்ணன் என்பவரை நியமித்தனர். இதனை கருத்தில் கொண்ட தி.மு.க தலைமை கே.எஸ் மூர்த்தியை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது.

இந்த சூழலில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த மதுரா செந்தில், திருச்செங்கோட்டினை பூர்விகமாக கொண்ட மலேசியா பிசினஸ்மேன் ஒருவர் மூலம் காய் நகத்தியதாக சொல்லப்படுகிறது. அவர் தலைமைக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். அவர் மூலம் மாவட்டச் செயலாளர் பதவியை கே.எஸ். மூர்த்திக்கு பின் மதுரா செந்திலுக்கு கிடைத்துள்ளது.

பதவி பறிப்போனதற்கான காரணம் என்ன?

திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஈஸ்வரன். இவருடைய தொகுதிக்குட்டபட்ட அர்த்தநாதீஸ்வரர் ஆலையத்தில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் நியமிப்பதில் தனது கொ.ம.தே கட்சி காரர்களுக்கே முன்னுரிமை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோயிலில், தி.மு.க-வினருக்கும் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று மதுரா செந்தில் கேட்டதாகவும், இதற்கு ஈஸ்வரன் செவி சாய்க்காததால், அரசியல் ரீதியான நகர்வுகளை தொகுதிக்குள் மதுரா செந்தில் எடுத்ததாகவும், இதனை ஈஸ்வரன் தனது நெருங்கிய நண்பரான அந்த தொழிலதிபர் காதுக்கு கொண்டுச் சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

‘கொங்கு’ ஈஸ்வரன்

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மதுரா செந்தில் சமரசமாகாததால், நடவடிக்கை எடுக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கட்சியில் இந்த தொகுதியில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் உட்கட்சி பிரச்னைகளை சரியாக கையாளவில்லை என்றும் குற்றசாட்டு எழுந்தது. தேர்தலுக்கு பின்னர் இது குறித்து தலைமை மதுரா செந்திலை கடிந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. எனினும் அவர் எதையும் சரி செய்யவில்லை.

இந்த நிலையில் தான் முரசொலியில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்ட செயலாளர் மாற்றம் என்றால் பொதுவாக அறிவாலயத்தில் இருந்து தான் அறிக்கையாக வெளிவரும். ஆனால், இம்முறை சம்பந்தப்பட்ட கட்சியின் பத்திரிகை மூலம் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியுள்ளது” என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...