6
September, 2026

A News 365Times Venture

6
Sunday
September, 2026

A News 365Times Venture

“`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

Date:

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் ‘பொய்களின் கூச்சல்’ (ஜூட் கி கூஞ்ச்). உண்மையின் கம்பீரமான கர்ஜனைக்கு முன்னால் பொய்யான உரத்த சத்தங்கள் நிலைத்து நிற்க முடியாது.

கடந்த 2013-ம் ஆண்டு இதே கல்லூரி மேடையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசினேன். அன்று நான் அளித்த வாக்குறுதிகளையும், நாட்டின் தற்போதைய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க எனக்குத் தைரியம் இருக்கிறது.

பிரதமர் மோடி

2013-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்து, ஊழல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிறைந்திருந்தது. இன்று உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தான் குறிப்பிட்ட ‘சிந்தனைவாதி நக்சல்கள்’ (திமாகி நக்சல்) என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது.

அந்த மருந்து அளிக்கப்பட்டவுடன், நோயின் அறிகுறிகள் வெளியே வருவது போல, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் இப்போது தங்களின் உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறை பலமடைந்துள்ளதுடன், நாட்டில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான்" – எச்சரிக்கும் ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப்...

"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக…" – தவெக மீது உதயநிதி விமர்சனம்

சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம்...

"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" – செக்கோவ்வின் வரிகளை நினைவூட்டிய சிந்தனைச் செல்வன்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப்...

“அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" – அமைச்சர் நிர்மல் குமார்

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின்...