15
October, 2026

A News 365Times Venture

15
Thursday
October, 2026

A News 365Times Venture

'தாமரை இலை மேல் தண்ணீர் போல…' – பட்டும் படாமல் SIR போராட்டத்தில் கலந்துகொண்ட தவெக?

Date:

சென்னை எழும்பூரில் இந்தியா கூட்டணி சார்பில் SIR க்கு எதிராகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் போராட்டம் நடத்தியிருந்தனர். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் உள்ளிட்ட கட்சியினரோடு ஆளுங்கட்சியான தவெகவும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது. ஆனால், மற்ற கட்சியினரை போல தீவிரமாக இல்லாமல் மேம்போக்காக ‘தாமரை இலை மேல் தண்ணீராக…’ தவெக இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக மற்ற கட்சிகளின் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கிசுகிசுக்கின்றனர்.

ஆர்ப்பாட்டம்

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகிறது. காக்ரோச் ஜனதா கட்சி, மாணவ அமைப்புகள், இந்தியா கூட்டணி கட்சியினர் என பல தரப்பினரும் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராடி கைதாகியிருக்கின்றனர்.

அதேநேரத்தில் காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் தவெக இந்த விவகாரத்தில் மேலோட்டமாகவே பேசியிருந்தது. `தேர்தலுக்கு முன்பாக என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்’ எனப் பேசினர் ஒழிய, ஞானேஷ் குமார் பற்றி எதுவும் பேசவில்லை இதனால் தவெக மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் எழும்பூரில் ஞானேஷ் பதவி விலக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. தவெக சார்பில் அமைச்சர் ராஜ் மோகன் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. இன்று காலை அந்த ஆர்ப்பாட்டமும் நடந்தது. ஆனால், தவெக இந்த ஆர்ப்பாட்டத்தை அணுகிய விதம் மேம்போக்காக இருந்தது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்ற கட்சிகளின் நிர்வாகிகளும் தொண்டர்களும் வருத்தப்படுகின்றனர். இதுதொடர்பாக நம்மிடைய இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் சிலர், ‘டெல்லியில் போராட்டம் பற்றியெறிந்துக் கொண்டிருந்த போது தவெக அழுத்தமாக எந்த கருத்தையும் சொல்லாமல் நழுவியது. அதுவே எங்களுக்கெல்லாம் அதிருப்தியாக இருந்தது. நாம் நடத்துகிற போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தப் போராட்டத்திலாவது தங்களின் எதிர்ப்பை தீவிரமாக வெளிக்காட்டுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜ்மோகன் ஒரு இடத்தில்கூட பாஜக என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனப் பேசவில்லை. மேலோட்டமாக தாமரை இலை மேல் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் ‘SIR யை வலுவாக எதிர்க்கிறோம்’ என்று மட்டும் பேசிவிட்டு நழுவிவிட்டார். போராட்டத்துக்கு மற்ற கட்சியின் தொண்டர்கள் கொடியோடு கூடியிருந்தனர். ஆனால், தவெகவின் தொண்டர்களையோ கொடியையோ கூட்டத்தில் காணவே முடியவில்லை. மேடையில் பெயருக்கு இரண்டு பேரை கொடியை பிடிக்க வைத்து நிற்க வைத்தார்கள், அவ்வளவுதான். தலைமையின் உத்தரவில்லாமல் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்திருக்க மாட்டார்கள். தவெக என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்றே புரியவில்லை. பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன் என போடும் வேடம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது’ என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" – ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை

ரஷ்யா - உக்ரைன் போரில் ஆரம்பத்திலிருந்தே உக்ரைன் பக்கம்தான் நிற்கிறது அமெரிக்கா.அமெரிக்க...

'முதல்வர் விஜய்-ன் ஆந்திர பயணத்தில் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை?'- துரைமுருகன் கேள்வி

முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரா பயணத்தில் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு என்ன...

'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' – CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர்

காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்...

'லண்டன், ஆந்திரா போல உள்ளூர் மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க.!'- முதல்வரை விமர்சித்த ஸ்டாலின்

சமீபகாலமாக அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக...