28
July, 2026

A News 365Times Venture

28
Tuesday
July, 2026

A News 365Times Venture

`தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்ற, நமது எம்.பிகள் விளக்கமளிக்க..' – ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

Date:

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள தீவிரவாதிகள் வேறு நான்கு தாக்குதல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். காங்கிரஸின் கேள்விகளுக்கு பா.ஜ.க பதிலளிக்கவில்லை.

ஜெய்ராம் ரமேஷ்

பயங்கரவாதிகள் மீது இருக்க வேண்டிய தாக்குதல் காங்கிரஸ் கட்சி மீதுதான் இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் ஏவப்படும் ஏவுகணைகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஏவப்படுகின்றன. ஒருபக்கம் தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். இன்னொருபக்கம் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க நம் எம்.பி-கள் உலகம் முழுவதும் சுற்றுகிறார்கள். இந்த முரண்பாடு குறித்து காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது” என்றார்.

தொடர்ந்து, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, “இதுதான் காங்கிரஸ் எங்கள் இராணுவத் தாக்குதலை, எங்கள் ராஜதந்திர தாக்குதலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இதற்காக நாடாளுமன்றம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா?.

‘ஆபரேஷன் சிந்தூர்’

உலகளாவிய மக்கள் தொடர்புக் குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் அடங்குவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பிரதிநிதிகளில் முக்கியமானவர் சசி தரூர், அவர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விளக்கமளிக்க அனைத்துக் கட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.” என்றார். தீவிரவாதிகள் கைது செய்யப்படாதது குறித்த காங்கிரஸின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

குமரி: கனிமவள லாரிகளுக்கு கட்டுப்பாட்டை நீக்கக் கோரி மறியல்; லாரி டிரைவர்கள் மீது கேரள போலீஸ் தடியடி

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு...

புதிய இந்தியாவின் விஸ்வரூப முகம்… மாணவ சக்திக்கு சல்யூட்!

‘நீட்’ நுழைவுத்தேர்வில் நடக்கும் முறைகேடுகளைக் களைந்து, தேர்வுமுறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும்,...

Houthi Vs சவுதி அரேபியா – மத்திய கிழக்கில் இன்னொரு மோதல்; உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்து?

ஈரான், அமெரிக்கா போருக்கே இன்னும் விடை தெரியவில்லை. அதற்குள் செங்கடலில் இன்னொரு...

போர்களில் ஈரானுக்கு உதவும் ரஷ்யா; ரஷ்யாவிற்கு உதவும் ஈரான்: எப்படி? உண்மையை உடைக்கும் ஜெலன்ஸ்கி?

இதுவரை ஒரு பக்கம் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் போர் நடந்துகொண்டிருந்தது. இன்னொரு பக்கம்,...