11
October, 2026

A News 365Times Venture

11
Sunday
October, 2026

A News 365Times Venture

'தவெக கோஷம்… சங்கடத்தில் நெளிந்த காங். சீனியர்கள்!' – ராகுல் காந்தியின் நிகழ்ச்சி சொதப்பிய பின்னணி

Date:

‘மாணவர்களின் குரல்’ என்ற பெயரில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நடத்தியிருந்தார்.

காங்கிரஸின் தேசியத் தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்கள் அரங்கில் கூடியிருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சீனியர்களையே சங்கடத்தில் நெளிய வைத்திருந்தது.

ராகுல் காந்தி

‘மாணவர்களின் குரல்’ என்ற பெயரில் எல்லா மாநிலங்களுக்கும் சென்று மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்ற நோக்கில் ராகுலுக்காக காங்கிரஸ் வடிவமைத்திருக்கும் நிகழ்ச்சிதான் இது.

ராஜஸ்தான், உத்ரகாண்ட், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து நேற்று தமிழகத்திலும் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தது. சென்னை தீவுத்திடலில் இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் காங்கிரஸ் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னையைச் சுற்றியிருக்கும் கல்லூரிகளின் மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுத்து நிகழ்ச்சி கூட்டி வந்திருந்தனர். கிட்டத்தட்ட 5000 மாணவ மாணவிகள் நிகழ்வரங்கில் கூடியிருந்தனர்.

மாணவிகள்
மாணவிகள்

மாணவர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி என்பதால் மேடையில் ராகுல் மட்டுமே இருக்கும்படி திட்டமிடப்பட்டிருந்தது. ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸின் சீனியர்களும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் மேடையிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் உட்கார இடம் ஒதுக்கப்பட்டிருந்தனர்.

செல்வப்பெருந்தகையைத் தவிர காங்கிரஸின் சீனியர்கள் எல்லாருமே நிகழ்வில் ஆஜராகியிருந்தனர். கோவிந்த் வசந்தா, தெருக்குரல் அறிவின் இசை நிகழ்ச்சிகள் என விழா உற்சாகமாகவே சென்று கொண்டிருந்தது. மாணவர்களும் டான்ஸ் ஆடி கூச்சல் போட்டு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.

‘தமிழக மாணவர்களின் எனர்ஜியைக் கண்டு ராகுல் வியக்கப் போகிறார்’ எனக் கதர் சட்டைக்காரர்கள் குஷியாக இருந்தனர். ஆனால், அத்தனை நேரமும் குஷியாக இருந்த மாணவர்கள் ராகுல் மேடையேறியவுடன் ‘தவெக…தவெக…’ எனக் கத்திவிட்டு அரங்கிலிருந்து வெளியேறதைக் கண்டு காங்கிரஸ் சீனியர்களின் முகத்தில் ஈ ஆடிவிட்டது.

ராகுல் பேசும்போதே கொத்து கொத்தாக மாணவர்கள் வெளியேறியதைக் கண்டு ப.சிதம்பரம் உட்பட சீனியர்கள் அத்தனை பேரும் சங்கடத்தில் நெளிந்தனர். ‘நாம் சொல்வதைக் கேட்காமல் இவர்களாக எதோ செய்து சொதப்பி விட்டார்களே….’ என முணுமுணுத்தும் கொண்டனர்.

நிகழ்ச்சி ஏன் சொதப்பியது எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம், ‘இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க டெல்லி தலைமையால் நடத்தப்படுகிறது. அவர்கள்தான் இதை முழுமையாக டிசைன் செய்தார்கள். மாணிக்கம் தாகூரின் உத்தரவின் பேரில் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை மட்டுமே நாங்கள் அழைத்து வந்தோம். ஆனால், நிகழ்ச்சியன்று இங்கே செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளில் எங்களுக்கே உடன்பாடு இல்லை.

ராகுல் 6 மணிக்கே மேடையேறிவிடுவார் எனக் கூறி மாணவர்களை 3 மணிக்கே அரங்குக்கு அழைத்து வர சொல்லிவிட்டார்கள். ஆனால், அரங்கில் மாணவர்கள் உட்கார சேர் கூட போடப்படவில்லை. மாணவர்களை தரையில் உட்கார சொன்னார்கள்.

தரையில் ஒரு விரிப்பு கூட விரிக்கவில்லை. தமிழகத்தில் இப்படிச் செய்வது தவறாகிவிடும்…எதாவது ஏற்பாடு செய்யுங்கள் எனத் தேசிய நிர்வாகிகளிடம் கூறினோம். அவர்கள் இந்தியா முழுவதும் இப்படித்தான் திட்டமிட்டிருக்கிறோம்.

எங்களின் ஸ்டைல் உங்களுக்குப் புரியாது எனத் தட்டிக்கழித்து விட்டார்கள். வெட்கையில் சிரமப்பட்டுதான் மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர். நிகழ்வின் வடிவமைப்பிலும் பிரச்னை இருந்தது. ராகுலை மாணவர்கள் மத்தியில் ஹீரோவாக முன்னிறுத்துவதே நிகழ்வின் நோக்கம். ஆனால், நிகழ்ச்சியில் ராகுலின் வீடியோக்களை ஒளிபரப்பி பின்னணியில் மாஸாக விஜய்யின் ‘வாத்தி கம்மிங்…’, ‘மாஸ்டர் தி பிளாஸ்டர்…’ பாடல்களை ஒலிக்கவிட்டார்கள்.

மற்ற மாநிலங்களில் இதைச் செய்தால் கூட பரவாயில்லை. இங்கே விஜய்யின் பாடல்கள் ஒலித்தவுடனேயே மாணவர்கள் ‘TVK…TVK…’ எனக் கத்த தொடங்கிவிட்டனர். தெருக்குரல் அறிவும் வந்து ‘வாத்தி கம்மிங்’ பாடலை லைவ்வாகப் பாடினார். அப்போதும் ‘TVK…TVK’ கோஷம்தான். மாணவர்களில் கணிசமானோர் நிகழ்ச்சிக்கு விஜய்யும் வரப்போகிறார் என்றும் நினைத்துவிட்டனர்.

ஆட்டம் பாட்டமெல்லாம் முடிந்து 7 மணிக்குத்தான் ராகுல் மேடையேறினார். அவர் மேடையேறி மைக் பிடிக்கும் போதும் ‘TVK…TVK..’ எனக் கோஷமிட்டனர். விஜய் வரவில்லை என்பதால் அதற்கு மேல் பொறுமையில்லாமல், உட்கார சௌகரியமான இடமுமில்லாததால் ராகுல் பேசும்போதே மாணவர்கள் கலையவும் தொடங்கினர்.

மாணவர்கள் கும்பலாக வெளியேற நினைத்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீஸூம் அவர்களை வெளியேற அனுமதித்தது.

ராகுல் பேசும் போதே மைதானம் காலியாவதைக் கண்டு சீனியர்கள் முகம் கலவரமடைந்துவிட்டது. அவர்கள்தான் உடனே நிர்வாகிகளை அனுப்பி காவல்துறை அதிகாரிகளிடம் பேசி மாணவர்கள் வெளியேறும் வழிகளை அடைக்க வைத்தனர். அதிலும் பிரயோஜனம் இல்லை.

அதற்குள்ளாகவே 70% மாணவர்கள் வெளியேறிவிட்டனர். இதற்கு மேலும் இழுத்தால் மைதானம் மொத்தமாகக் காலியாகிவிடும் என்பதால்தான் ராகுலும் சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொண்டார். முழுக்க முழுக்க டெல்லி கையிலெடுத்து செய்யும் பிராஜெக்ட் இது.

டெல்லியிலிருந்து ஊடகவியலாளர்களையும் இன்ப்ளூயன்சர்களையும் செலவு செய்து அழைத்து வந்திருந்தனர். அவர்கள்தான் நிகழ்ச்சி வெற்றி…வெற்றி… எனப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், களத்தில் எந்தத் தாக்கமும் இல்லை. டெல்லி தலைமை தமிழக மாணவர்களுக்கு இலவசமாக ஒரு கான்சர்ட்டை ஏற்பாடு செய்து கொடுத்ததைப் போலத்தான் இருந்தது.

காங்கிரஸ் சீனியர்கள்
காங்கிரஸ் சீனியர்கள்

கான்செர்ட் முடிந்தவுடன் மாணவர்கள் கலைந்துவிட்டார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டியுடன் முழுமையாக ஆலோசித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்” என்கின்றனர்.

நம்மிடம் பேசிய இன்னும் சில நிர்வாகிகள், ”ராஜஸ்தான், ம.பி, உ.பி, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா எனப் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். பாஜகவை மாணவர்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதுதான் ராகுலின் நோக்கம். அப்படியிருக்க அந்தப் பேட்டர்னை உடைத்து தமிழகத்துக்கு வந்தது முன் யோசனையற்ற முடிவு.

இங்கே பாஜக இல்லவே இல்லை. இதில்தான் தேசியத் தலைமை வேறொரு கணக்கை இட்டிருக்கிறது. வட இந்தியாவில் விஜய்தான் பிரதமர் என ஒரு பிரசாரம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. தவெக வேண்டுமென்றே இதைச் செய்வதாக தேசியத் தலைமை நினைக்கிறது. தவெகவின் அந்தப் பிரசாரத்துக்கு செக் வைக்கும் வகையில்தான் தமிழகத்தில் மாணவர்களின் கூட்டத்தைக் கூட்டி ராகுலுக்கு மாஸ் ஏற்றலாம் எனத் தலைமை நினைத்தது. ஆனால், அது மிகத் தவறான முடிவு.

விஜய் இப்போது மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவோடு நிற்கிறார். கொஞ்சம் அமைதி காத்து சரியான அரசியல் சூழல் வாய்க்கையில் மாணவர்களைத் திரட்டியிருந்தால் நினைத்தது நடந்திருக்கும். டெல்லி தலைமை அவசரப்பட்டுவிட்டது” என்றனர்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விறகுக்கு இரையாக இருந்த ஆல மரங்கள்; 200 கிமீ லாரிகளில் எடுத்து வந்து உயிர் கொடுத்த நல்லுள்ளங்கள்!

மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்தியா முழுவதும் போடப்படும் சாலைகள் மற்றும் தேசிய...

Modi: 'கற்பூர நாயகியே…' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’...

SIR விவகாரம்: "உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று சென்று அலுத்துவிட்டது" – கபில் சிபல் விமர்சனம்

சிறப்புத் தீவிரத் திருத்தத்தில் நடந்த குளறுபடிகள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்...

"உக்ரைனுக்கு புதிய அதிபர் வர வேண்டிய நேரம் வந்துவிட்டது" – ரஷ்யாவிடம் 'டீல்' போட்ட ட்ரம்ப் கருத்து

நேற்று முன்தினம் (அக்டோபர் 9) அமெரிக்க அதிபர் டரம்ப், ரஷ்யாவுடன் டீசல்...