19
August, 2026

A News 365Times Venture

19
Wednesday
August, 2026

A News 365Times Venture

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்…" – சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

Date:

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அடுத்த சில நாள்களிலேயே அவரிடமிருந்து பதவியைப் பறித்தார்.

அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளராகப் பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்த கப்பச்சி வினோத் த.வெ.க-வில் இணைந்ததால் பால. நந்தகுமார் இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராகப் பதவிவகித்து வருகிறார்.

பால. நந்தகுமார்

த.வெ.க அரசின் 100 நாள் ஆட்சி குறித்து தெரிவித்துள்ள அவர், “தேர்தல் நேரத்தில் பிரசார மேடைகளில் த.வெ.க பத்து சீட்டுகளுக்கு மேல் ஜெயித்தால் மீசையை எடுத்துக் கொள்கிறேன் எனச் சவால் விட்டிருந்தேன். மாயாஜாலம் ஏதோ செய்து 108 வாங்கி ஆட்சியும் அமைத்துவிட்டார்கள்.

100 நாள் ஆட்சி நிறைவுற்ற பிறகு நண்பர்கள் சிலர் நினைவுபடுத்தியதைத் தொடர்ந்து நேற்று மீசையை எடுத்துக்கொண்டேன்” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தேர்தலில் த.வெ.க 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால் மீசையை மழித்துக் கொள்வேன் எனப் பிரசாரக் கூட்டங்களில் விடுத்த சவாலில் தோற்றதால் மீசையை மழித்துக் கொண்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளரின் செயல் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள...

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" – கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை...

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' – தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத்...

"கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால்.!" – முதல்வர் விஜய்யின் அறிவிப்பும் MLA-க்களின் பதில்களும்!

110 விதியின் கீழ் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் (கார்) வழங்கப்படும்...