தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்திருக்கிறார்.
விஜய் நேற்று பெரம்பூரிலிருந்து தன்னுடைய பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார். இதற்காக 5 பாயிண்டுகளில் பேசுமாறு ஒரு பிரசார திட்டத்தையும் ஏற்பாடு செய்து தேர்தல் அலுவலரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், பெரம்பூரில் விஜய் பிரசாரம் செய்யவிருந்த இடம் கூட்டம் கூட ஏற்றது அல்ல எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்நிலையில், காபந்து திமுக அரசுதான் தன்னுடைய பிரசாரத்தை முடக்குவதாக விஜய் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என மற்ற கட்சிகளின் பிரசாரத்துக்கு எளிதில் அனுமதி கிடைக்கும் நிலையில், தங்களின் பிரசாரத்துக்கு அனுமதி கிடைப்பதில்லை. அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக கூறி விஜய் ஒரு புகார் மனுவை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் கொடுத்திருக்கிறார்.
மேலும், திமுக ஆட்சியில் பணியாற்றிய சில அதிகாரிகள் அதே பணியிடத்தில் நீடிப்பதாகவும் அவர்களை மாற்ற வேண்டும் என்றும் விஜய் புகார் கொடுத்திருக்கிறார்.




