12
August, 2026

A News 365Times Venture

12
Wednesday
August, 2026

A News 365Times Venture

`தமிழைவிட சம்ஸ்கிருதம்தான் பழைமையானது; தோல்வி பயத்தில் திமுக…' – மக்களவையில் பாஜக எம்.பி பேச்சு

Date:

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜார்கண்ட் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருக்கிறார். இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய அவர், “அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் தி.மு.க மக்களின் உணர்ச்சிகளை தூண்டுகிறது. தமிழ் ஒரு பழைமையான மொழி, ஆனால் சம்ஸ்கிருதம் தமிழைவிட பழைமையானது.

நிஷிகாந்த் துபே

தமிழ் பேசும், தெலுங்கு பேசும், கன்னடம் பேசும் பகுதி மட்டுமல்ல, நாடு முழுவதும் எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எல்லா இடங்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜை செய்யப்படுகிறது. தி.மு.க மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி நாட்டைப் பிரிக்க விரும்புகிறது. தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கும் திமுக தமிழ், தெலுங்கு, மைதிலி, சந்தாலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் எதிராகவே இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்தைக் குலைக்க முயற்சிக்கிறது. ஆங்கிலத்தை திணித்து தேர்தல்களில் வெற்றி பெற விரும்புகிறது” என்றார். பாஜக எம்.பி-யின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை தூண்டியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரள மாநில பெயர் 'கேரளம்' என மாற்றும் மசோதா மக்களவையில் நிறைவேறியது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்' என மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து...

“ரஷ்யாவில் விரைவில் தேர்தல்; புதின் போடும் போர் பிளான் இது" – என்ன சொல்கிறார் ஜெலன்ஸ்கி?

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. அடுத்த மாதத்தில்...

‘மதத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளலாமா? அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – வானதி காட்டம்

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “தமிழ் படித்தவர்களுக்கு 'அன்பின்...

கோவை அருகே கொசு மருந்து அடித்ததால் இருவர் உயிரிழந்ததாக புகார் – நடந்தது என்ன?

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி ஏழாவது வார்டுக்கு உட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியில்...