20
August, 2026

A News 365Times Venture

20
Thursday
August, 2026

A News 365Times Venture

தமிழர்கள் சுட்டுக்கொலை: "எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்"- கர்நாடக முதல்வர் பதில்

Date:

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கர்நாடகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் கர்நாடகா வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் என்று கர்நாடகா அரசு குற்றம் சாட்டுகிறது.

ஆனாலும், தமிழ்நாடு இந்தச் சம்பவத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், “இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து, தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த நேரத்தில், இந்தச் சம்பவம் குறித்த கேள்விக்கு கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “எந்தவொரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனக்கெனச் சிக்கல்கள் இருக்கின்றன. அதேபோல, எங்கள் மாநிலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்பதை அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். அவர்களின் நிர்வாகத்தில் தலையிட எங்களுக்கு விருப்பமில்லை.

நமது மாநிலத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் நாம் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நாம் நம் வேலையைச் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பென்ஸ், எட்டியோஸ், டிகார்… சொந்தமாக கார் இருந்தும்!' – எம்எல்ஏ-க்கள் குறித்து வெளியான தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு விசிக...

கல்லூரி மாணவிகளின் செலவுக்கு மாதம் ரூ.2000; மேற்படிப்பை ஊக்கப்படுத்த மகாராஷ்டிரா அரசு புது திட்டம்

மகாராஷ்டிரா அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு...

TN Assembly: உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கை; அமைச்சர் தாக்கல் | Live Updates

'சட்டமன்றம் இன்று...'கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகப்புத் துறையின் மானியக் கோரிக்கையை...

`அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்; ஆனால்.!'- அரசுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில்...