1
February, 2026

A News 365Times Venture

1
Sunday
February, 2026

A News 365Times Venture

"தமிழக மக்கள் கட்சிகளின் செயலைத்தான் பார்ப்பார்கள்; பணத்தை அல்ல” – விஜய்க்கு மாணிக்கம் தாகூர் பதில்

Date:

விருதுநகரில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “ஞானசேகரன் வழக்கை நடத்திய சட்டத்துறை, நீதித்துறைக்குப் பாராட்டுக்கள். கடுமையான தண்டனையை விதித்திருக்கும் நீதித்துறை, பெண்களின் பாதுகாப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

டெல்லி யமுனை ஆற்றங்கரையில் மதராசா காலனி பல ஆண்டுகளாக உள்ளது.

மாணிக்கம் தாகூர்

பா.ஜ.க அரசு அமைந்த பிறகு தற்போது அவசர அவசரமாக இடிப்பதற்கான வேலையைச் செய்து வருகிறது. பா.ஜ.க தமிழர் விரோத அரசுதான் என்பதை மறுபடியும் காட்டியுள்ளது.

வரும் 2026 தேர்தலில் திராவிடக் கட்சிகள் பணத்தை லாரி லாரியாக கொட்ட இருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்திருப்பது, புதிதாக கட்சி தொடங்குபவர்களும், எதிர்க்கட்சிகளாக இருப்பவர்களும் கூறும் வாதம். தமிழின மக்களைப் பணத்திற்கு விலை போகும் நபர்கள் போல விஜய் பேசியிருப்பது நியாயமல்ல.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால், தமிழக மக்கள் எதிர்த்து வாக்களித்தனர். மக்களின் மனம் செயல்பாட்டில் இருக்கிறதே தவிரப் பணத்தில் இல்லை. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளனர்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

முதல்வரின் பல நல்ல திட்டங்கள் மக்களிடம் போய்ச் சேர்ந்திருப்பதால் அதனைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம்.

இந்தியா முழுவதும் ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றன. வந்தே பாரத் கதை பேசி வருகிறார்கள். சாமானியர்கள் பயன்படுத்திய ரயில்வேயை தற்போது பணக்காரர்களுக்கான ரயில்வேயாக மாற்றி வருகிறார்கள்” என்றார்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி போலி மருந்து முறைகேடு வழக்கு: "சிபிஐயின் மௌனத்திற்குக் காரணம் இதுதான்" – நாராயணசாமி பகீர்

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் தற்போது நடைபெறும்...

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" – பூவுலகின் நண்பர்கள்

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில்...

Budget 2026: "இது 5 சதவீத மக்களுக்கானது" – பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்வது என்ன?

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர்...

Budget 2026: “இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" – பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்....