26
October, 2026

A News 365Times Venture

26
Monday
October, 2026

A News 365Times Venture

’தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம்’ – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.

Date:

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், சரவணம்பட்டி பகுதியில் ‘கற்க ஏ.ஐ.’ திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.இதுகுறித்து கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. கூறுகையில், “எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கியமான இடத்தைப் பெறும் என அனைவரும் தெரிவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். எனவே, நமது கவுண்டம்பாளையம் தொகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஏ.ஐ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த நோக்கில் இந்த முன்னெடுப்பு இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

நடிகர் தனுஷ் பெண் நிர்வாகிகளை சந்திப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் ரீதியாகச் சந்திக்கலாம். தனுஷ் அரசியலுக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். தமிழக வெற்றிக் கழகம் அனைவரையும் வரவேற்கிறது. அரசியலில் ஆரோக்கியமான விவாதங்களும், ஆரோக்கியமான போட்டியும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரச்னைகளை விரைந்து சரிசெய்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி சந்தோஷ், “மக்கள் தங்களுடைய பிரச்னைகளைத் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பொதுமக்களின் குறைகளை விரைவாகக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் நமது தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கைகள் முதல்வருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் நீண்ட காலமாகத் தாமதமடைந்த பணிகளைக்கூட விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு...

'ஐப்பசி பௌர்ணமி, சிவன் செண்டிமெண்ட், தாமரையோடு காமாட்சி விளக்கு!' – தனுஷ் மகளிரணி கூட்ட ஹைலைட்ஸ்!

நேற்று சென்னை செம்மஞ்சேரியில் தனது நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள்...

“அவரை இக்னோர் பண்ணுங்க… அவரும் அவர் ஸ்டேட்மெண்டும்" – சேகர் பாபு குறித்து அமைச்சர் மரிய வில்சன்!

சென்னை காசிமேட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மற்றும் TNPTC இணைந்து...

அட்டைப்படம்

Source link