21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

“டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' – ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

Date:

“அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன், ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் இதுவரை இல்லாத வகையில் குண்டுகளை ஈரான் மீது வீசுவோம்” என்று ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அமெரிக்கா- ஈரான்

அமெரிக்கா – ஈரான் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே ஈரான் அணுசக்தி திட்டத்தின் மூலம் அணு ஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதனை எதிர்க்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது. அணுசக்தி திட்டத்தில் ஒரு ஒழுங்கு முறை வேண்டும் என்றும் கூறி வருகிறார்.

அணுசக்தி திட்டம் மூலம் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ட்ரம்ப் முடிவு செய்து ஈரான் உயர்மட்டக் குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் ஈரான் அந்த கடிதத்தை ஏற்கவில்லை.

ஈரானை தொடும் முன்பு ஒவ்வொரு நாடுகளும் யோசிக்க வேண்டும். இது பழைய ஈரான் இல்லை என்று கூறி புறக்கணித்து விட்டனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்நிலையில் இதுதொடர்பாக ட்ரம்ப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். “ஈரான் எங்களின் டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது குண்டுமழை பொழிவோம்.

இந்த சம்பவம் இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் இருக்கும். அணு ஆயுத ஒப்பந்ததிற்கு தயாராக வில்லை என்றால் ஈரான் கடும் பொருளாதார தடைகளைச் சந்திக்கும்” என்று கூறியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர்...

"ஆதரவு தரோம்னு சொல்லிட்டு சிலர் நைட்டோட நைட்டா ஓடிட்டாங்க.!"- தவெக கூட்டணியை விமர்சித்த உதயநிதி

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக மாவட்ட - ஒன்றிய...

ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகள் – ஈரான் புது நகர்வு

ஈரான் போரைத் தாண்டி உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஹார்முஸ்...

'ரஷ்ய தடைச் சட்டத்திற்கு நன்றி; பல மாற்றங்கள் வரலாம்'- ட்ரம்பிடம் பேசிய பின் ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. இன்னும்...