21
October, 2026

A News 365Times Venture

21
Wednesday
October, 2026

A News 365Times Venture

'ஞானேஷ் குமாருக்கு எதிரான மாணவர் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக போலீஸ்!' – என்ன காரணம்?

Date:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் SIR க்கு எதிராகவும் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி, இடதுசாரி மாணவ அமைப்புகள் மூலம் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் ஞானேஷ் குமாருக்கு எதிராக இடதுசாரி மாணவ அமைப்புகளும் காக்ரோச் ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் இறங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், தமிழக காவல்துறை அந்தப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்திருக்கிறது. அனுமதி வழங்கப்படாததற்கான காரணம் என்ன?

ஞானேஷ் குமார்

காக்ரோச் ஜனதா கட்சி, SFI, AISF, DIYF போன்ற இடதுசாரி மாணவ அமைப்புகள் உட்பட 9 அமைப்புகள் ஒன்றிணைந்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட திட்டமிட்டனர். நாளை (அக்.22) மாலை 4 மணி தொடங்கி அக்டோபர் 23 மாலை 4 மணி வரை என தொடர்ந்து 24 மணி நேரத்துக்கு போராட்டத்தை நடத்த முடிவெடுத்திருந்தனர்.

ஜந்தர் மந்தர் 2.0 என இந்தப் போராட்டத்துக்கு பெயரிட்டு சமூக வலைதளங்களில் அறிவிப்பையும் வெளியிட்டனர். இந்தப் போராட்டத்துக்காக கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அனுமதிக் கோரி கடிதமும் கொடுத்தனர். ஆனால், காவல்துறை இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுக்க மறுத்திருக்கிறது.

போராட்ட அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு

மாணவ அமைப்புகளின் பிரதிநிதிகள் காவல்துறை அதிகாரிகளுடன் அனுமதி வேண்டி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் காவல்துறை தரப்பில் தொடர்ந்து போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘போராட்டக்குழுவினர் கூறும் எண்ணிக்கையை விட அதிகளவில் ஆட்கள் கூட வாய்ப்பிருக்கிறது. மேலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடரவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படி நடக்கும்பட்சத்தில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே சட்டம் ஒழுங்கையும் பொது அமைதியையும் காக்கும் பொருட்டு போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது’ என காவல்துறையினர் கடிதம் கொடுத்திருக்கின்றனர். மேலும், சென்னையில் இரவு நேரத்தில் போராடும் அனுமதி கிடையாது. அதனாலும் இந்தப் போராட்டத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது என காவல்துறையினர் வாய் மொழியாகவும் கூறுகின்றனர்.

போராட்டக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு
போராட்டக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு

`SIRயை எதிர்க்கும் தவெகவின் ஆட்சியில் காவல்துறை யாருக்காக வேலை செய்கிறது?’ என கேள்வியெழுப்பும் மாணவ அமைப்பினர், நாளை கட்டாயமாக தடையை மீறி போராடுவோம் எனக் கூறுகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி கைலாசா ஆசிரமத்தில் பாஜக உள்துறை அமைச்சர் – வீடியோ மூலம் நித்தியானந்தா வரவேற்ற பின்னணி!

திருவண்ணாமலையைப் பூர்வீகமாகக் கொண்ட நித்தியானந்தாவுக்கு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு ஆசிரமங்கள்...

Chennai : 'எச்சரித்த முதல்வர் தரப்பு; மழையில் இறங்கிய தவெக அமைச்சர்கள்!' – பின்னணி என்ன?

அக்டோபர் 17 ஆம் தேதி இரவு சென்னையில் குறுகிய நேரத்தில் மிகக்...

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' – தமிழ்நாடு அரசு

லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து...

“10 நாள்களாக கண்டுபிடிக்க முடியாத சிறுமி; காவல்துறை செயலிழந்து வருகிறதா?" – டிடிவி தினகரன் காட்டம்

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலையைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7...