29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

சேலம்: மதுபோதையில் மாணவனைக் கொன்று படம் பிடித்த சிறுவர்கள்; போர்க்கால நடவடிக்கை கோரும் அன்புமணி

Date:

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மதுபோதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரைச் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி, கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை தேவை என்று தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

representative images

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மாணவன் கோகுலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவன் கோகுல், அவருடன் பயிலும் மாணவர்கள் இருவர் உள்ளிட்ட மூவரும் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் மாணவன் கோகுலை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொலை செய்யும் காட்சிகளைக் காணொலியாகப் பதிவு செய்து கொண்டாடியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மூவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

மது மனிதர்களை எந்த அளவுக்கு மிருகமாக்குகிறது என்பதற்கு மிக மோசமான எடுத்துக் காட்டு இதுதான். தங்களுடன் ஒன்றாகப் பழகிய நண்பனைக் கொலை செய்தது மட்டுமின்றி, அதை காணொலியில் பதிவு செய்து கொண்டாடும் அளவுக்கு மது மனிதனைக் கொடூரனாக மாற்றியிருக்கிறது. மதுவை விட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் மனிதர்களை மேலும் மோசமாக்குகின்றன.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டில் மதுவும், பிற போதைப் பொருள்களும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் மது மற்றும் போதையின் சீரழிவுகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்து விட்டன. நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்க தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தமிழக அரசை டேக் செய்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல…' – தொல்.திருமாவளவன்

ஆண்டிமடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் மீசை தமிழ்மாறனின் தாயார் மறைவிற்கு...

`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக...

சதுரகிரி: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை திட்டம்! – நிறைவேற்றுமா புதிய அரசு?

தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர...

`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' – முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!

போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார்...