ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ரீல்ஸ் எடுப்பதாக கூறி, 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோபதிவு செய்த புகாரில் தஞ்சாவூரை சேர்ந்த யூடியூப்பர் திவ்யா(வயது 36), ஈரோட்டை சேர்ந்த கீழக்கரை என்ற கார்த்திக்(30), கடலூரை சேர்ந்த சித்ரா(48), ஆனந்தராமன்(24) ஆகிய 4 பேர் மீது ஜனவரி 29-ம் தேதி போக்சோ வழக்குப்பதிவு செய்து, ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் ஜாமின் மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. நாளையுடன் (மார்ச் 12) நீதிமன்ற காவல் நிறைவடைய உள்ளது.
இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகியோர் மீது ஏற்கெனவே பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க விருதுநகர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் கண்ணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் திவ்யா, சித்ரா, கார்த்திக் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 3 பேரும் நேற்று குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
