29
June, 2026

A News 365Times Venture

29
Monday
June, 2026

A News 365Times Venture

சிறந்த செயல்திறனுக்காக `சன்சத் ரத்னா விருது' – திமுக எம்.பி. உள்பட 17 பேர் தேர்வு! – முழு விவரம்!

Date:

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்திறனை மதிப்பளிக்கும் விதமாக சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2010-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பரிந்துரையின்படி, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட Prime Point Foundation அமைப்பால் நிறுவப்பட்டது.

அப்துல் கலாம்

இந்த விருதுக்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்பது, மசோதா தாக்கல், கேள்விகள் எழுப்புதல் போன்ற செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த விருதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய, தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (NCBC) ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையில், ஜூரி குழு செயல்படுகிறது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற நிலைத் துறை குழுக்கள் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விருதுபெரும் எம்பிகள்

  • சுப்ரியா சூலே (NCP-SP, பரமதி)

  • ஸ்ரீரங் அப்பா பார்னே (சிவசேனா, மாவல்)

  • மெதா குல்கர்னி (பா.ஜ.க, ராஜ்யசபா)

  • வர்ஷா கைக்வாட் (காங்கிரஸ், மும்பை)

  • ஸ்மிதா உதய் வாங் (பா.ஜ.க)

  • அர்விந்த் கண்பத் சாவந்த் (சிவசேனா UBT)

திமுக எம்பி அண்ணாதுரை
திமுக எம்பி அண்ணாதுரை
  • நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனா)

  • பர்த்ருஹரி மஹ்தாப் (பா.ஜ.க, ஒடிசா)

  • என். கே. பிரேமச்சந்திரன் (RSP, கேரளா)

  • பி. பி. சௌதரி (பா.ஜ.க, ராஜஸ்தான்)

  • மதன் ராதோர் (பா.ஜ.க, ராஜஸ்தான்)

  • நிஷிகாந்த் டுபே (பா.ஜ.க, ஜார்க்கண்ட்)

  • பிரவீன் படேல் (பா.ஜ.க)

  • பித்யுத் பரன் மஹதோ (பா.ஜ.க)

  • சீ. என். அண்ணாதுரை (தி.மு.க, தமிழ்நாடு)

  • திலீப் சாய்க்கியா (பா.ஜ.க, அசாம்)

  • ரவிக் கிஷன் (பா.ஜ.க, உத்தரப் பிரதேசம்)

நாடாளுமன்ற நிலைத்துறை குழுக்கள்:

  • நிதி நிலைத்துறை குழு (தலைவர்: ஜெயந்த் சின்ஹா)

  • விவசாய நிலைத்துறை குழு (தலைவர்: அடி கவுதர்)

  • போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் நிலைத்துறை குழு (தலைவர்: விஜய்சாய் ரெட்டி)

இந்த சன்சத் ரத்னா விருது விழா, ஜூலை மாத இறுதியில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தொண்டை சரியில்ல' – ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு அமைச்சரின் பதில்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது த.வெ.க சார்பில் மகளிருக்கு மாதந்தோறும்...

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது...

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய...

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு...