6
April, 2026

A News 365Times Venture

6
Monday
April, 2026

A News 365Times Venture

சாத்தான்குளம்: “மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." – ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

Date:

கொ

ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் – ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

சாத்தான்குளம் வழக்கு

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், “காவல்துறை அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதை விட மரணதண்டனை விதிப்பதே சிறப்பானது.” எனக் குறிப்பிட்ட நீதிபதி, 9 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயராஜ் – பென்னிக்ஸ் குடும்பத்தினர், “எங்களைப் போல இன்னொருக் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது என நாங்கள் நினைத்தோம். அதற்காகதான் சட்டப்போராட்டத்தில் உறுதியாக இருந்தோம். எங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது.

உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்
உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ்

நீதிமன்றம் மட்டுமல்ல எல்லாத்துறையினரும் எங்களுக்கு ஒத்துழைத்தார்கள். மேல் முறையீடு சென்றாலும் அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதிமன்றம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பில் இனி இதுபோல எந்த சம்பவமும் நடைபெறக்கூடாது என நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு அப்படியே செயல்பட்டால் மகிழ்ச்சி. எங்களுக்கு மதுரை நீதிமன்றம் உறுதுணையாக இருந்ததற்கு நன்றி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அருணாச்சலப் பிரதேசம்: முதல்வர் பேமா காண்டு மீது சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டுவின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை...

“காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" – பிரவீன் சக்ரவர்த்தி

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான்...