4
October, 2026

A News 365Times Venture

4
Sunday
October, 2026

A News 365Times Venture

கல்வி உதவித்தொகை வழங்குவதாக மாணவர்களிடம் சைபர் மோசடி – வேலூரில் இவ்வளவு புகார்களா?

Date:

வேலூர் மாவட்டத்தில், பள்ளி – கல்லூரி மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோர்களைக் குறி வைத்து அடையாளம் தெரியாத மர்ம நபா்கள் செல்போன் மூலம் தொடா்பு கொண்டு “அரசு சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதனைப் பெறுவதற்கு தங்களின் வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். எனவே, உடனடியாக விண்ணப்பப் பதிவு செய்ய வேண்டும்” என ஆசைவாா்த்தை கூறி வருகின்றனர்.

தொடா்ந்து, பதிவு கட்டணம், ஆவண சரிபாா்ப்புக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, க்யூ.ஆா் கோடு ஒன்றை அனுப்பி பொதுமக்களிடமிருந்து இணையவழியில் கட்டணம் வசூலித்துள்ளனா். பணத்தை செலுத்திய பின்னா் சம்பந்தப்பட்ட நபா்களின் செல்போன் எண்கள் துண்டிக்கப்படுவதுடன், அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து மொத்தத் தொகையும் திருடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் புகார்களை அளித்து வருகின்றனர்.

இவ்வாறு கடந்த ஒரே மாதத்தில் மட்டும் ரூ.20 லட்சம் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக 30-க்கும் மேற்பட்டோா் புகாா் தெரிவித்துள்ளனர். இந்த புகாா்களை சைபா் கிரைம் போலீஸாா் பதிவு செய்ததுடன், மோசடி தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சைபர் மோசடி

இது குறித்து வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கூறியதாவது, “வேலூர் மாவட்டத்தில் இலவச கல்வி, கல்வி உதவித்தொகை, ஸ்காலர்ஷிப் என்கிற பெயரில் மாணவர்களைக் குறிவைக்கும் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த வகை மோசடி தொடா்பாக நாள்தோறும் புகாா்கள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது பள்ளி நிா்வாகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி பெற்றோா்களை நம்பவைத்து ஏமாற்றும் புதிய உத்திகளையும் மோசடி கும்பல் கையாளத் தொடங்கியுள்ளது. எனவே, கல்வி உதவித்தொகை தொடா்பாக வரும் அடையாளம் தெரியாத மற்றும் சந்தேகத்துக்கிடமான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், இணையதள இணைப்புகளை பொதுமக்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம்.

தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொல் மற்றும் ஓ.டி.பி போன்ற ரகசியத் தகவல்களை யாருடனும் பகிரக் கூடாது. இத்தகைய மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளவும். அரசு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு பதிவு செய்ய பணம் செலுத்த வேண்டியதில்லை. தெரியாத லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அரசு அதிகாரிகளையும், காவல்துறையினரையும் தொடர்பு கொள்ளுங்கள். உண்மையான கல்வி உதவித்தொகை திட்டங்கள் பற்றிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மட்டுமே சரிபார்க்க வேண்டும். அறியாமை ஆபத்தை அழைக்கும்” என்கின்றனர் எச்சரிக்கையாக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர...

`நீங்க கண்டிப்பா வரணும்..!' – உயிர்களைக் காப்பாற்றிய இந்திய கேப்டனை இஸ்ரேலுக்கு அழைத்த நெதன்யாகு!

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானத்தில் ஏற்பட்ட திடீர் தாக்குதலில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய...

"தோத்தாங்குளி கட்சிகள்தான் தங்கள் தோல்விக்கு SIR-ஐ காரணம் சொல்கின்றன" – நடிகை கஸ்தூரி கிண்டல்

இடைத்தேர்தல் பிரசாரம் உச்சம் எட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசியல்...

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்? – `ராஜினாமா' முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலேகா!

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள...