25
May, 2026

A News 365Times Venture

25
Monday
May, 2026

A News 365Times Venture

'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' – தமிழிசை சௌந்தரராஜன்

Date:

நடிகர் கமல்ஹாசனின் ‘தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது’ என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி இருந்தாலும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

இந்நிலையில், தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC) விதித்த தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தாக்கல் செய்த மனு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்தது.

கமல்ஹாசன் – சிவராஜ்குமார்

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? என கேள்வி எழுப்பி, அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் விவகாரம் முடிந்திருக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ” நம்முடைய தன்னலமற்ற ராணுவம் தேசத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, சுயநல காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே பகைமையை உருவாக்காதீர்கள்.

 சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

அன்பு மன்னிப்பு கேட்காது என கூறிவிட்டு, நீண்ட கடிதம் எழுதுவதற்கு பதிலாக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்கு இதில் என்ன ஈகோ? அதற்கு பதிலாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏனெனில் அவர் தவறு செய்திருக்கிறார் ” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`புதிய கரகாட்ட கோஷ்டி; ஆட்சியை காப்பாற்ற தகிடுதத்தம் அரசியல், வெட்கக்கேடு'- விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர்...

சிறு குறு, பெரு விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு! – யாருக்கு எவ்வளவு? முழு விவரம்!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு...

எம்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார்! – பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு மக்களால்...

`இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது திமுக; ஆயுள் தண்டனை வரை..'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆகும் நிலையில்,...