27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

கனமழையால் மிதக்கும் கோவை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி!

Date:

வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், நேற்று பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மதுக்கரையில் 13 செ.மீ., வாரப்பட்டியில் 12.8 செ.மீ, போத்தனூரில் 11.8 செ.மீ, கோவை தெற்கில் 10.5 செ.மீ மழை பதிவானது. இதேபோல பொள்ளாச்சி, வேளாண்மை பல்கலைக்கழகம், மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், வீடுகளை சூழ்ந்த மழைநீர்

இந்த நிலையில் செல்வ சிந்தாமணி குளம் நிரம்பி வழிவதால், செல்வபுரம் பகுதி இரண்டாவது நாளாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது. பிரபு நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெள்ளநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு செய்தார். இதன் காரணமாக அப்பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

குளத்தில் இருந்து வெளியேறும் நீர்
குளத்தில் இருந்து வெளியேறும் நீர்

இதேபோல கோவை மாநகராட்சி 80வது வார்டுக்கு உட்பட்ட சேதுமா வாய்க்கால் பகுதியில் குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், மழை நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு; பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி; எந்தப் பொருள் எவ்வளவு உயர்வு?

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களின்...

Dhanush: "தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது" – திண்டுக்கல் சீனிவாசன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது...

நெருக்கிய போலீஸ்; களத்தில் இறங்காத உடன்பிறப்புகள்!' – அன்பிலை கைவிட்ட அறிவாலயம்?

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள்...

புழலில் அன்பில்! – முறையிட்ட திமுக தரப்பு; ஏற்காத நீதிபதி! நள்ளிரவில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நவம்பர் 6 ஆம் தேதி...