8
March, 2026

A News 365Times Venture

8
Sunday
March, 2026

A News 365Times Venture

கடுமையாகும் ஈரான் போர்: முன்பை விட வேகமாக வலுவாகும் அமெரிக்க டாலர்! – இது 'எப்படி' சாத்தியம்?

Date:

ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது.

இதற்கான ‘4’ காரணங்கள் என்ன?

> போர் பதற்றத்தில் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்கிறார்கள்.

அப்படியான பாதுகாப்பு முதலீடுகளில் ‘அமெரிக்க கருவூலப் பத்திரமும்’ ஒன்று.

ஆக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் கருவூலப் பத்திரம் உள்ளிட்ட அமெரிக்க சார்ந்த முதலீடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது.

us dollar – usd – அமெரிக்க டாலர்

> இந்தியாவைப் போன்று எரிசக்திக்கு இன்னொரு நாட்டை சார்ந்திருக்கும் நாடல்ல அமெரிக்கா.

அமெரிக்காவே எரிசக்தியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்.

அதனால், கச்சா எண்ணெய் மீதான அழுத்தம் அமெரிக்க டாலரை எட்டவில்லை.

> எரிசக்தியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.

இதனால், இப்போதைக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காது.

இந்த எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பை வலுவாக்கி உள்ளது.

> இப்போது நிலவும் நிலையற்ற தன்மையால், உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் தேவை.

காரணம், அது தான் உலகளாவிய நாணயம்.

இதனாலும், நாடுகள் அமெரிக்க டாலர் பக்கம் திரும்பியுள்ளன. இதுவும் அதன் மதிப்பை உயர்த்துகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அரசியலில் தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக' – வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி...

'எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' – ஈரான் கூறும் 'அமெரிக்கா'வின் பிளான்?

ஈரானின் உச்ச தலைவர்‌ இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது.இன்னமும் அமெரிக்கா, இஸ்ரேல்,...

அப்பா நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றால் என்ன, பீகார் அரசியலில் என்ட்ரி கொடுத்த 'மகன்' நிஷாந்த்

முதலமைச்சராக பதவியேற்ற கிட்டத்தட்ட 4 மாதங்களில் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்...